தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்

(தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பம்)

தெற்காசிய சபாநாயகர்களின் மாநாடு இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது. இந்த மாநாடானது, இன்றும் நாளையும் இடம்பெறும்.

நிலையான அபிவிருத்தி நோக்கை நிறைவேற்றுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு பாராளுமன்ற முன்றலில் இன்று காலை 9.30ற்கு ஆரம்பமாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு பிரதான உரை நிகழ்த்துவதோடு,  சபாநாயகர் கரு ஜயசூரிய வரவேற்புரை நிகழ்த்துவார்.

மாநாட்டு அமர்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெறும். பங்களாதேஷிலும் இந்தியாவிலும் இடம்பெற்ற முதலாம் இரண்டாம் மாநாடுகளில் எடுக்கப்பட்ட முடிகள் குறித்தும் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படும்.

ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றார்கள்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*