நல்லாட்சி அரசாங்கத்தினால் முஸ்லிம்களை காப்பாற்ற முடியாத நிலை! அவசரமாக மஹிந்தவை சந்தித்த ஜம்மியத்துல் உலமா!

(நல்லாட்சி அரசாங்கத்தினால் முஸ்லிம்களை காப்பாற்ற முடியாத நிலை! அவசரமாக மஹிந்தவை சந்தித்த ஜம்மியத்துல் உலமா!)

நேற்று (06.03.2018) செவ்வாய்கிழமை இரவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, இலங்கை முஸ்லிம் புத்தி ஜீவிகள், முன்னாள் ஜனாதிபதியின் முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார் ஆகியோருக்கு   இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில், கருத்து தெரிவித்த அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஊடகப் பேச்சாளர் “நாட்டில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு மீண்டும் மக்கள் வரம் கிடைத்துள்ளது. அதிக மக்கள் உங்களுடனேயே இருக்கின்றனர். உங்கள் மீது நம்பிக்கையும் மதிப்பும் வைத்துள்ளனர். ஆகவே, நீங்கள் மக்களிடம் சமாதானத்தை கோரிக்கை விடுத்தால் மக்கள் அதற்கு செவி சாய்ப்பார்கள்” என தெரிவித்தார்.

இதனை, செவியுற்ற முன்னாள் ஜனாதிபதி “இந்த வன்முறைகளை கண்டிப்பதாகவும். வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் இனம், மதம், மொழி, கட்சி என பாராமல் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும். இந்த அசம்பாவிதங்கள் நாடு பூராகவும் பரவாமல் இருக்க,   ரணில் மற்றும் மைத்திரி ஆகியோர் மாறி மாறி மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தாமல் கூடிய கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இதன் முழுப்பொறுப்பையும் தற்போதைய அரசாங்கமே எடுக்க வேண்டும். இன்றும் என்றும் நான் ஒன்றுமைக்கும், சமாதானத்துக்கும் உரிய பங்களிப்பை செய்வேன். ”  என  தெரிவித்தார்.

-S.M. கபீர் –

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*