படுக்கைக்கு செல்ல 1 மணித்தியாலத்திற்கு முன் குடித்தால் இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?

(படுக்கைக்கு செல்ல 1 மணித்தியாலத்திற்கு முன் குடித்தால் இப்படி ஒரு அற்புதம் நடக்குமா?)

உங்களின் ஆரோக்கியமான சுகாதாரத்திற்கும் நல்ல நடத்தைக்கும் ஒழுங்கான இரவு நேர தூக்கம் அவசியமானதாகும். அதாவது ஒரு சிறந்த இரவு நேர தூக்கமானது உள ஆரோக்கியத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாத்து சிறந்த ஆயுளை தருகின்றது. இதனால் தூக்கம் அத்தியாவசியமானதாகும்.

காரணம் தூங்கும் போது மூளை எமது நாளாந்த செயற்பாடுகளை செய்வதற்கு போதுமான நேரம் இதில் கிடைப்பதோடு உங்களின் உடல் ஆரோக்கியத்தையும் பேணுகின்றது.

இதன் விளைவாக, தூக்கம் மூளையை சுத்தம் செய்யும் திறனை மேம்படுத்துகின்றது. தூக்கம் உடலில் புத்துயிர் அளித்து கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்துகின்றது. குறைவான தூக்கம் பல காரணங்களால் ஏற்படுகின்றது. நமது வாழக்கை முறை, கவலைகள்,கனிம குறைபாடு மற்றும் மோசமான உணவுகளும் முக்கிய காரணங்கள் ஆகும்.

இருப்பினும் குறைவான தூக்கம் உடலில் ஆற்றல் குறைப்பாடு, மன அழுத்தம்,மனநோய்,உடல் பலவீனம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. சில புதிய ஆராய்சி தகவலின் படி மாறான குழப்பங்களை தோற்றுவிக்கின்றது. 50 – 70 மில்லியன் அமெரிக்கர்கள் மோசமான தூக்கத்தாலும் தூக்கமின்மையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே , இது தான் சிலர் எரிச்சலுடனும் களைத்;தும் இருப்பதற்கான உண்மையான காரணமாக தென்படுகின்றது. ஆனால் நீங்கள் கவலை பட வேண்டியதில்லை. அதனை தீர்பதற்கு இயற்கையான வழிகள் உதவுகின்றது. ஆகையால் இந்த தூக்க பிரச்சினையை தீர்பதற்கு தூங்கும் முன் வாழைப்பழம் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த கலவையினை தேநீரில் கலந்து உட்கொள்ளும் முறையினை இந்த கட்டுரை உங்களுக்கு காட்டும்.

இந்த இரண்டு பொருட்களும் எமது உடலிற்கு அதிக நன்மைகளை வியக்கக்கூடிய வகையில் தருகின்றது. வாழைப்பழமானது அதிக பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற அதிக கனியுப்புக்களை கொண்டுள்ளதால் சிறந்த தூக்கத்தை ஏற்படுத்தும். அதேப்போல் இந்த அற்புதமான கனிமங்கள் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு உடலில் எதிர்மறை தாக்கங்களை உருவாக்கும் கார்டிசாலை பிரித்து அழித்து உதவும்.

இந்த அற்புதமான பழங்கள் ட்ரைடோபேன் எனும் அமினோஅமிலத்தினை கொண்டுள்ளது. இவை செரட்டோனின் அளவை அதிகரித்து தூக்கத்தின் அளவை அதிகரிக்கின்றது. இந்த செய்முறையில் பயனுள்ள மூலப்பொருளான யுஜினோல் எனும் அத்தியாவசிய எண்னெய்யை கொண்டிருக்கின்றது.

இது இனிப்பு, விட்டமின், பாத்தோதோனிக அமிலம்;,நியாசின்,பைரிடாக்சின் போன்றவற்றை கொண்டுள்ளது. இந்த மசாலா உங்களின் உடலிற்கு நன்மையை தரும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இது உடலை நிதானப்படுத்துகிறது. உடலிற்கு தேவையான செரிமானம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு உதவுகிறது.

• தேவையான பொருட்கள்
 1 லீற்றர் நீர்
 1 வாழைப்பழம்
 இலவங்கப்பட்டை ( சிறிதளவு )

• செய்முறை
நீங்கள் முதலில் நீரை கொதிக்க வைத்து அதில் வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். அதனை 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின் அதனை தேநீரில் கலக்க வேண்டும். நீங்கள் விரும்பினால் அதனுடன் சிறிதளவு இலவங்கப்பட்டையையும் சேர்க்கலாம். இவை மேலும் சுவையை தரும்.

• பாவனை முறை
இந்த தயாரிப்பினை நீங்கள் தூங்க செல்ல தயாராகி 1 மணித்தியாலத்திற்கு முன் அருந்த வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*