பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை – அரச இரசாயன பகுப்புபாய்வில் அம்பலம்

(பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை – அரச இரசாயன பகுப்புபாய்வில் அம்பலம்)

அம்பாறையில் பரோட்டாவிற்குள் மாத்திரை இருக்கவில்லை எனவும், அது ஓர் மாவுக் கட்டி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கள பௌத்தவர்களின் இன விருத்தியை சிதைக்கும் நோக்கில் உணவுப் பொருட்களில் மருந்து மாத்திரைகளை கலந்து அம்பாறை முஸ்லிம் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அண்மையில் அம்பாறையில் கடையொன்றில் இந்த வகை மாத்திரை, பரோட்டாவில் கலக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்து பெரும் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.
இந்த மருந்து போடப்பட்டதாகக் கூறப்பட்ட பரோட்டா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரச இரசாயன பகுப்புபாய்வுத் திணைக்களத்தினால் ஆய்வு உட்படுத்தப்பட்டிருந்தது.
இதன்போது பரோட்டாவில் எவ்வித மருந்தும் கலந்திருக்கவில்லை எனவும், மாவு துகள் ஒன்று கட்டியாகவிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
அரசாங்க இரசாய பகுப்பாய்வாளர் ஏ. வெலியங்ககே இதனைத் தெரிவித்துள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து வகைகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர்நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*