மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது

(மாகாண சபைகள் தொடர்பான புதிய சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது)
மாகாண சபைகள் தொடர்பான புதியசட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

அது பல குளறுபடிகளை கொண்டது. முஸ்லிம்சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல்ஆக்கக்கூடியது. எனவே பழைய முறையில்மாகாண சபைத்தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகரதிட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமானரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கட்டுகஸ்தொட்டையில் அமைக்கப்பட்டுள்ளகண்டி மாவட்டத்திற்கானஅமைச்சரின்  ஒருங்கிணைப்பு அலுவலகம் கடந்தவெள்ளிக்கிழமை (13) அமைச்சரினால் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் லக்கிஜயவர்தன, நீர்வழங்கல் வடிகால் அமைப்புசபையின் தலைவர் கே.ஏ.அன்சார்,பிரதித்தலைவர் எம்.எச்.எம்.சல்மான், அமைச்சரின்பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ்,தேசியஒற்றுமை முன்னணியின் செயலாளர் மஹியலால்சில்வா  மற்றும் பிரதேச சபைஉறுப்பினர்கள்,பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.இங்கு உரைநிகழ்த்தும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரைநிகழ்த்திய அவர் “இந்த அரசாங்கத்தின்  அபிவிருத்தி தொடர்பில்எவ்விதமான குறைகளையும் சொல்லமுடியாதுகாரணம் நான் இதுவரை பலஅமைச்சுப்பொறுப்புக்களை வகுத்துள்ளேன் அந்தஅமைச்சுக்களின் மூலம் செய்ய முடியாதஅபிவிருத்தியை இந்த அரசாங்கத்தின் மூலம்எனது அமைச்ச்சுக்கூடாக செய்துள்ளேன். பாரியபல அபிவிருத்திகள் கடந்த மூன்று வருடங்களில்இடம் பெற்றுள்ளன. எனது அமைச்சைபொறுத்தமட்டில் சுமார் 15 வேலைத்திட்டங்கள்ஆரம்பிக்கப்பட்டுநடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இன்னும்ஒன்பது வேலைத்திட்டங்கள் ஆரம்பிப்பதற்கானஏற்பாடுகள் பூர்த்தியடைந்துள்ளன.நீர் வழங்கல்திட்டங்களுக்காக மட்டும் இந்த அரசாங்கம் 300பில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளது.வரலாற்றில் இதற்க்கு முன்னர் எந்த அரசும்இவ்வளவு பெரிய தொகையைஒதுக்கியுள்ளது.இதன் மூலம் 3.5 மில்லியன்பொதுமக்கள் பயனடைய உள்ளனர்.

அதுமட்டுமல்ல கண்டியில் மட்டும் இரண்டு நீர்வழங்கல் திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.ஓன்று சீன அரசின் நிதியுதவியுடன் மற்றையதுஇந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன்நிர்மாணிக்கப்படுகின்றன.இந்த இரண்டுஅரசாங்கத்திற்குமிடையில் சொல்லிக்கொள்ளும்அளவுக்கு நல்ல உறவு கிடையாது என்பதுஉலகறிந்த விடயம்.இருந்தும் இவ்விருஅரசாங்கமும் நமக்கு உதவி புரிகின்றன.
அவ்வாறே சமூக நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் 1000சங்கங்களுக்கூடாக நீர் வழங்கல் திட்டத்தினையும்கொண்டு நடத்த திட்டமிட்டுள்ளேன். தற்போதுபுதிதாக வந்துள்ள எமது இராஜாங்க அமைச்சரின்ஊடாக இந்த திட்டத்தை நடத்துவதற்கு திட்டம்வகுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு இந்ததிட்டங்களின் மூலமும் அத்தோடு அரசின் நிதிஒதுக்கீட்டையும் எடுத்துக்கொண்டு நாங்கள் இந்தசமூக நீர் வழங்கல் திட்டத்தினை வலுவானதாகஆக்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.அவ்வாறே அரசின்  “கம்பரலிய”  வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேசகாரியாலத்திற்கூடாகவும் 200 மில்லியன்ரூபாய்கள் ஒதுக்கப்பட்டு குறித்த பிரதேசசெயலகத்திற்குற்பட்ட கிராமங்களை அபிவிருத்திசெய்கின்ற வேலைத்திட்டங்களை ஆராய்ந்துஅவற்றை செயற்படுத்த ஏற்பாடு செய்துள்ளது.அவை இந்த வருட இறுதிக்குள் நடாத்தி முடிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த மக்கள் தொடர்பாடல் பணிமனைமக்களுக்கும் எங்களுக்குமான தொடர்பாடலைதொடர்ச்சியாக பேணுவதற்காகஉருவாக்கப்பட்டதாகும். கண்டி மாவட்டத்தில்கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் 14ஆசனங்களை நாங்கள் பெற்றுள்ளோம். இதுஇதற்க்கு முன்னர் நாம் பெற்றுக்கொள்ளாதஅளவாகும். எனவே கண்டி மாவட்டத்தின்அபிவிருத்தியில் இன்னும் அவதானத்தைதைசெலுத்தும் வகையில் இது அமைந்துள்ளது.
மாகாண சபைகள் தொடர்பான புதியசட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. அது பலகுளறுபடிகளை கொண்டது. முஸ்லிம் சமூகத்தின்பிரதிநிதித்துவத்தை இல்லாமல் ஆக்கக்கூடியது.எனவே பழைய முறையில் மாகாணசபைத்தேர்தலை நடத்தவேண்டும். பழையமுறையில் விருப்பு வாக்கு தொடர்பிலானமதபேதங்கள் ஏற்பட்டாலும் அதைவிடவும் பெரியபிரச்சினை புதிய முறையில் ஏற்பட வாய்ப்புள்ளது.எனவே புதிய தேர்தல்முறையை ரத்து செய்துவிட்டுஅவசரமாக பழைய முறைப்படியே மாகாணசபைகள் தேர்தலை நாடாத்துவதே நல்லது.
இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இந்தகுளறுபடியை நாம் அவதானித்தோம். சபையில்ஆட்சி அமைப்பதில் பலத்த சவாலும், குழப்பநிலையும் ஏற்பட்டது.சபையின் தலைவரை தெரிவுசெய்வதில் இழுபறிநிலை ஏற்பட்டது.அதுமட்டுமல்ல பெருமளவில் பணப்பரிமாற்றமும்இடம்பெற்றது. சிலஉறுப்பினர்கள் தலைவர்தெரிவுக்கு வாக்களிக்க நேரடியாக பணத்தினைகேட்டனர். இன்னும் சிலர் விலைபேசப்பட்டனர்.இது பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை.
எல்லோருக்கும் தெரிந்த விடயமது. எல்லா கட்சிதலைவர்களுக்கும் இது பெரும் தலையிடியாகஅமைந்தது. இவ்வாறான ஒருகுழப்பகரமான போக்கு புதிய தேர்தல்முறையினால் உருவாகியதை நாம் அனைவரும்மறந்திருக்க முடியாது.இந்த முறையில் இருந்துநாம் தூரமாகி மாற்றத்தை கொண்டுவரவேண்டும்.
இப்போது மாகாண சபை தொகுதி பிரிப்பானதுஎந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதவகையில் தான்மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதற்கிடையில்தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் விரைவில்மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் எனஎல்லா இடங்களிலும் கூறுகிறார்.
நானும் அதையேதான் சொல்கிறேன் தேர்தலைபிற்போடாமல் நடத்துங்கள் பழையமுறைப்படி.ஆனால் உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஆங்காங்கே உளறிக்கொண்டுதிரிகிறார்.அவர் சொல்வது போல ஒருநாளும்மாகாண சபை தேர்தலை அங்கீகரிக்கமுடியாது.தேசியப்பட்டியல் மூலம்பாராளுமன்றத்திற்கு வந்தவர்களுக்கு இதுபற்றிஎதுவும் விளங்காது.புண்ணியத்திற்குபாராளுமன்றத்திற்குள் பிரவேசித்துவிட்டுஎங்களை குறைகூறுகின்றார்கள்.விருப்பு வாக்குமுறைமைக்கு மீண்டும் செல்ல முடியாதாம், புதியதேர்தல் முறைக்கு தான் செல்ல வேண்டுமாம்.இதுதேர்தலை பிற்போடும் உபாயமார்க்கமாகும்.தேர்தலுக்கு முகம் கொடுக்கஇவர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. அந்தஅழுத்தத்தை குறைப்பதற்கு இவ்வாறானகாரணங்களை கூறுகின்றனர்.
மக்களுக்கு கொடுத்த பல வாக்குறுதிகள்மீறப்பட்டுள்ள நிலையில் இதனை மட்டும்காரணம் காட்டுவது வேடிக்கையானவிடயமாகும்.ஒரு தேர்தல் முடிவானதுதீர்க்கமானதாக இருக்கவேண்டும். வெற்றிபெற்றவர்கள் சபையை அமைப்பதற்குஇடையூறாக எந்தக்காரணமும் இருக்க முடியாது.
அவ்வாறு இருக்குமாயின் அந்த தேர்தல் முறையில்பிழை உள்ளது என்பதனை புரிந்து கொள்ளவேண்டும். எனவே தான் மாகாண சபை தேர்தலைபழைய முறைக்கு நடத்துமாறு நாம்கோருகின்றோம். இதுதொடர்பில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க அவர்களும் தெளிவானஒருநிலைபாட்டில்தான் இருக்கிறார்.பழையவிருப்புவாக்கு முறைப்படி தேர்தலை  விரைவில்நடத்த வேண்டும் என அவரும் கூறியுள்ளார்.
எனவே உள்ளூராட்சி மாகாண சபைகள்அமைச்சருக்கு நான் சவால் விடுகின்றேன்தேர்தலை பிற்போடுவதற்கானதந்திரோபாயங்களை கைவிட்டுவிட்டு முடிந்தால்பழைய முறைப்படி இந்த ஆண்டுக்குள் தேர்தலைநடத்திக்காட்டுங்கள் எனக்கூறினார்.
-நாச்சியாதீவு பர்வீன்-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*