முதுகு வலியை நிரந்தரமாக விரட்ட இந்த பானத்தைக் குடித்தாலே போதும்..!

(முதுகு வலியை நிரந்தரமாக விரட்ட இந்த பானத்தைக் குடித்தாலே போதும்..!)

நம்மில் பலருக்கு கடுமையான முதுகு வலி ஏற்படுவதுண்டு. இப் பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது.அவ்வளவு ஏன், நிமிர்ந்து உட்காரவோ அல்லது இழுத்து மூச்சு விடவோ முடியாது.

சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும்.இந்த வகையான முதுகுவலி இடுப்பு மற்றும் மூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையாலேயே ஏற்படுகின்றது.

இப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை நிரந்தரமாக விரட்ட இந்த இயற்கை பானத்தைக் குடித்தால் போதும். இந்த அற்புதமான இயற்கை பானத்தை செய்வது எப்படி என்று பார்ப்போம்

தேவையான பொருட்கள்
01. பால் – 200 மிலி
02. பூண்டு – 4 பற்கள்

தயாரிக்கும் முறை
முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும்.பின் அதில் பூண்டு பற்களைத் இடித்துப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும்.

பருகும் முறை
இந்தப் பாலை தினமும் குடிப்பது சிறந்தது. இப்படி குடிப்பதால் இடுப்பு அல்லது முதுகு வலி குறைவடையும்.வலி முழுமையாக நின்று விட்டால் இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*