
(முஸ்லிம்களுடன் பழக ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்த, பெரும்பான்மையின பாடசாலை மாணவர்கள்)
பிபிலை நகரின் பிரதான பாடசாலைகளின் ஒன்றான தர்மபிரதீப கல்லூரியையைச் சேர்த்த பாடசாலை
மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் சகிதம் இன்று 21தாம் திகதி பிபிலை நகரில் இருந்து மூன்று கிலோமீட்டர் துலைவில் இருக்கும் கனுல்வெல எனும் எமது ஊரில் உள்ள ஜும்மா பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தார்கள், இவர்களை நமது ஊரைச் சேர்த்த பெரியார்கள் ஆலிம்கள் அன்பாக வரவேற்றார்கள் .
பாடசாலை மாணவர்கள் notebook களுடன் வருகை தந்திருந்தமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது, இதன் போது நமது தூய இஸ்லாம் மார்க்க நற்போதனைளையும் சகவாழ்வை பற்றியும் ஆலிம்கள் போதனை செய்தார்கள், இதை செவிமெடுத்த மாணவர்கள் notebookகில் குறிப்புக்கண் எழுதிக் கொண்டார்கள்,
இப்படியான அந்நிய சகோதர பாடசாலை மாணவர்களின் விஜயங்கள் எமது மார்க்கத்தில் சந்தேகங்களை இல்லாதொழிக்கவும் சகோதரத்துவத்தை வளர்க்கவும் உதவி புரியும் என்பதில் ஐயமில்லை.
Leave a Reply