
(முஸ்லிம்கள் அச்சப்படத் தேவையில்லை – ரஞ்சித்)
கண்டி வன்முறைச் சம்பவதுடன் பொலிஸ் உயர் அதிகாரிகளோ அல்லது பொலிஸாரோ தொடர்புபட்டிருந்தால் அவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமென சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் கவுன்சில் பிரதிநிதிகளுக்கும், அமைச்சருக்கும் இடையே இன்று (15) நடைபெற்ற சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தற்போது நிலைமை எமது பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது. பிந்திய நிலவரங்கள் பற்றிய அறிக்கை தொடராக பெறப்பட்டு வருகிறது.
சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள், இந்நிலையில் முஸ்லிம்கள் எவரும் சந்தேகப்படத் தேவையில்லை. நாம் சட்டத்தை உரியமுறையில் அமுல்படுத்துவோம். தவறு செய்தவர்கள் எவராயினும் அவர் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply