
(முஹம்மட் றம்சான் என்பவரின் வாகனத்துக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு)
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலாம் கொலனிப் பகுதியில் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுக்கு இன்று(15) நள்ளிரவு 12 மணியளவில் இனந்தெரியாதோரால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்ட வாகனம் சிலாபத்தை சேர்ந்த மொஹமட் சாஹிர் முஹம்மட் றம்சான் என்பவருக்கு சொந்தமான வாகனமென்றும் தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது தங்களது வியாபாரம் நிமித்தம் கந்தளாய் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றபோது இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு வகையான சத்தம் கேட்டபோது திடீரென்று வெளியில் வந்து பார்த்தபோது வாகனம் தீப்பற்றுவதைக் கண்டதாகவும் பிறகு தீயை அனைத்ததாகவும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகன உரிமையாளர் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
-ஹஸ்பர் ஏ ஹலீம்-
Leave a Reply