ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவு

(ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்தை ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவு)

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டாரா என்பது தொடர்பில் ஆராயுமாறு சட்ட மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டிருந்த கருத்துக்கள் தொடர்பாகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மீண்டும் ரஞ்சன் ராமநாயக்க நீதிபதிகளை அவமதிக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*