ரஷ்யா மற்றும் குரோஷியா காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு

(ரஷ்யா மற்றும் குரோஷியா காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவு)

2018 உலக கிண்ண கால்பந்து தொடரின், 2ஆம் சுற்று போட்டியில் இரண்டு போட்டிகள் நேற்று இடம்பெற்றன.

முதல் போட்டியில் ரஷ்யா மற்றும் ஸ்பெயின் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

போட்டித் தொடரில் ஸ்பெயினுடன் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற ரஷ்யா காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளது.

இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் ஒரு கோல் வீதம் பெற்றதன் காரணமாக, வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்கென மேலதிக நேரத்தை வழங்க நடுவர்கள் தீர்மானித்தனர்.

இரண்டு அணிகளும் கோல்களைப் போடாததால் பெனால்டி அடிப்படையில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொனால்டி முறை வழங்கப்பட ரஷ்யா 4க்கு 3 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியது.

இதேவேளை, டென்மார்க் அணியுடன் நேற்று இடம்பெற்ற மற்றைய போட்டியில் வெற்றி பெற்று குரோஷியாவும் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவானது. இந்தப் போட்டியின் வெற்றி தோல்வியும் பெனால்டி அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது.

பிரேஸில் மற்றும் மெக்சிகோ அணிகளுக்கு இடையிலான போட்டியும், பெல்ஜியம் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்று இடம்பெறவுள்ளன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*