ராஜ­பக்ஷ குடும்­பத்­துக்கு வெளியில் இருந்தும் ஜனா­தி­பதி வேட்­பாளர் வரக்­கூ­டிய சாத்­தியம் உள்­ளது : பஷில்

(ராஜ­பக்ஷ குடும்­பத்­துக்கு வெளியில் இருந்தும் ஜனா­தி­பதி வேட்­பாளர் வரக்­கூ­டிய சாத்­தியம் உள்­ளது : பஷில்)

ஜனா­தி­பதி தேர்­தலில் கூட்டு எதி­ர­ணி யின் தரப்பில் ராஜ­பக்ஷ குடும்­பத்­துக்கு வெளியே உள்­ள­வர்­களை
வேட்­பா­ள­ராக நிறுத்­து­வது குறித்தும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­ வ­தாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜ­ப க்ஷ தெரி­வித்­துள்ளார்,

ஆங்­கில நாளிதழ் ஒன்­றுக்கு அளித்­துள்ள செவ்­வியில், ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் வேட்­பாளர் தொடர்­பாக எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கே அவர் இந்த பதிலை அளித்­தி­ருக்­கிறார். அவர் அதில் மேலும் தெரி­வித்துள்­ள­தா­வது,

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிடும் வேட்­பாளர் தொடர்­பாக மஹிந்த ராஜ­பக்ஷ அவ­ச­ரப்­பட்டு முடி­வெ­டுப்பார் என்று நான் நினைக்­க­வில்லை. தேர்­த­லுக்கு இன் னும் 450 நாட்கள் வரை உள்­ளன.

இந்­த­ள­வுக்கு முன்­கூட்­டியே வேட்­பாளர் பற்றி நாம் முடிவு செய்ய வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்று நினைக்­கிறேன்.

முன்னர், பொது­மக்கள் மற்றும் அமைப்­புக்க­ளுடன் அதிகம் கலந்­து­ரை­யா­டியே முடிவு எடுக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பாக முடிவெ­டுக்க பல கட்­சிகள், அமைப்­பு­க்க­ளுடன் கலந்­து­ரை­யாடும் முறை­யான நடை­மு­றை­களைப் பின்­பற்ற வேண்­டி­யுள்­ளது. நடை­மு­றை­க­ளின்­படி, மஹிந்த ராஜ­பக் ஷ இதனை சரி­யான நேரத்தில் மேற்­கொள் வார்.

கேள்வி: வேட்­பா­ள­ராக உங்­களின் பெயர், கோத்­தா­பய ராஜ­பக் ஷ மற்றும் சமல் ராஜ­பக் ஷவின் பெயர்­களும் அடி­ப­டு­கின்­ற­னவே… உங்­க­ளுக்கு ஜனா­தி­பதி கனவு இருக்­கி­றதா?

பதில்: என்­னிடம் அத்­த­கைய கனவு இல்லை. பலரும் பல்­வேறு கருத்­துக்­களை வெளி­யி­டு­கி­றார்கள். அது அவர்­களின் சுதந்­திரம். தகு­தி­யான பலர் இருக்­கி­றார்கள் என்­ப­தையும் இது காட்­டு­கி­றது.

நீங்கள் குறிப்­பிட்ட பெயர்­களைத் தவிர வேறு பல பெயர்­களும் உலா­வு­கின்­றன. அவர்­களில் ராஜ­பக் ஷ குடும்­பத்தைச் சேரா­த­வர்­களும் உள்­ளனர்.

கேள்வி: ராஜ­பக் ஷ குடும்­பத்­துக்கு வெளி யில் உள்­ள­வர்கள் யார்?

பதில்: அதனை நான் வெளிப்­ப­டை­யாகக் கூற விரும்­ப­வில்லை. ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் குறித்து பேசு­வதை நிறுத்திக் கொள்­கிறேன். அது­பற்றி மஹிந்த ராஜ­பக் ஷவே முடிவு செய்வார். அனை­வ­ரு­டனும் கலந்­து­ரை­யாடி இறுதியான முடிவை எடுக்கும் எடுக்கும் உரிமை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கேள்வி: ஜனாதிபதி வேட்பாளருக்கான தகைமைகள் குறித்த உங்களின் கருத்து என்ன?

பதில்: மீண்டும் சொல்கிறேன், அதனை மஹிந்த ராஜ­பக்ஷ கவனித்துக் கொள்வார் என்று அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*