“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க

3d people - man, people push up word "tax"
(“வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வரி செலுத்த வேண்டும்” ஐவன் திசாநாயக்க)
வாகனம் ஒன்றை வைத்திருக்கும் மற்றும் வௌிநாட்டு சுற்றுலாக்களை மேற்கொள்ளும் ஒவ்வொரு நபரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் ஐவன் திசாநாயக்க கூறியுள்ளார்.
காலியில் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
வரி செலுத்த வேண்டிய வாகனம் ஒன்றை உரிமையில் வைத்திருக்கும் ஒவ்வொரு நபரும் பொதுவாக வரி செலுத்தக் கூடிய வருமானம் உள்ளவராக இருப்பதாக அறியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் பெரும்பாலானோர் விடுமுறைகளின் போது வௌிநாடுகளுக்கு சுற்றுலா செல்வதாகவும் அவ்வாறு சுற்றுலா செல்வோர் வரி செலுத்த முடியுமானவர்களாக அறியப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*