ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்

(ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்றுகூடல்)

இன்று (24.07.2018) ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் முதலாவது கொழும்பு மாவட்ட ஒன்று கூடல் முன்னால் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளர் பிரேமசிறியின் தலைமையில் கொழும்பில் அமைந்துள்ள சிலோன் சிட்டி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களான மத்திய மாகாணசபை உறுப்பினரும், கொழும்பு மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவருமான அல்-ஹாஜ் உவைஸ், வத்தளை, மபோலை நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய உறுப்பினரும் கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவருமான ஏ.எச்.எம்.நௌசாத், பேருவல நகர சபையின் முன்னாள் தலைவரும் தற்போதைய களுத்துறை மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவருமான மில்பர் கபூர், குருணாகல் மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவர் அப்துல் சத்தார், மாத்தளை மாவட்ட முஸ்லிம் பிரிவின் தலைவர் மகீன், கொழும்பு மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள், தொழிலதிபர்கள், புத்திஜீவிகள்,  ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் முன்னணியின் ஊடகப்பிரிவு   மற்றும் கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான சஹாப்தீன் என பலரும்  கலந்து கொண்டனர்.

இவ்வாரான 100 ஒன்றுகூடல்களை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

-ஊடகப் பிரிவு-

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*