ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு

(ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் (21) சனிக்கிழமை காலை கொழும்பு – 05நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்,நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் பிரதம அதிதியாகவும் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதி அமைச்சர் அலிசாகிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதரகத்தின் தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீகின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடைய நல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கே.எம்.ஏ.முஹம்மது அபுபக்கர், அப்துல் காதர் மௌலானா, புரவலர் ஹாசிம் உமர், முன்னாள் மத்தியமாகாண சபை உறுப்பினர் அசாத் ஷாலி, மேல்மாகாண சபை உறுப்பினர் முஹமட் பாயிஸ், கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் எம்.ஐ.எம்.இக்பால்  உள்ளிட்ட பலர் விஷேட அதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

வருடாந்த மாநாட்டில் சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்த இரு பிரமுகர்களான பேராதனைப் பல்கலைக் கழக அரபு, இஸ்லாமிய நாகரீகத்துறை முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம் (எம்.ஏ) மற்றும் சிங்களத்தில் இஸ்லாமிய பணி புரிந்துவரும் தஹ்லான் மன்சூர் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மற்றும் ஊடகத்துறையில் பல தசாப்தங்களாக அரும்பணி புரிந்த புரிந்துவரும் அல் – இஸ்லாம் ஸ்தாபக ஆசிரியர் ஹம்ஸா ஹனீபா, தயா லங்கா புர, (சிரேஷ்ட ஊடகவியலாளர் தகவல் திணைக்களம்), எம். இஷட் அஹ்மத் முனவ்வர் (இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் முஸ்லிம் சேவைப் பணிப்பாளர்), கலாநிதி ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம் சஞ்சிகை), திருமதி ஸக்கியா சித்தீக் பரீத் (ஆசிரியர் பீடம் நவமணி), மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்) எம்.ஐ. சம்சுதீன் (பிராந்திய ஊடகவியலாளர்) ஆகிய 07 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்  ஊடகத் துறைப் பங்களிப்பை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டத்தின் இரண்டாவது அமர்வாக பகற்போசனத்தின் பின்னர்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான் மற்றும் பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் பதவிகளுக்கு எவரும் போட்டியிடாததன் காரணமாக மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக , பொதுச் செயலாளராக , பொருளாளராக  போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் போரத்தின் சஞ்சிகையின் முதற்பிரதியை பிரபல வர்த்தகர் முஸ்லிம் சலாஹுதீனும், போரத்தின் 6ஆவது பதிப்பான ஊடக விபரக் கொத்தின் (மீடியா டிரக்டறி) முதற் பிரதியை பிரபல வர்த்தகர் இப்ராஹிமும் அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

நிகழ்வில் பிரதம அதிதிக்கு போரத்தின் தலைவர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மாநாட்டின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெற்றன. நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்வதற்கு 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் நிறைவேற்றுக் குழுவிற்கு  பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.

 1. எம்.பி.எம். பைறூஸ் (விடிவெள்ளி)- 74
 2. ரிப்தி அலி (விடியல் இணைய தளம்)- 54
 3. எம்.எஸ். ரிபாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)- 53
 4. பலீலுர் ரஹ்மான் (பிராந்திய ஊடகவியலாளர்)- 52
 5. எஸ்.எம்.எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்)- 52
 6. எம்.எஸ்.எம். ஸாகிர் (நவமணி) – 51
 7. எஸ்.ஏ. அஸ்கர் கான் (நொலேட்ஜ் பொக்ஸ்)- 51

08 ஜாவிட் முனவ்வர் (வானொலி) – 50

 1. ஷாமிலா ஷெரீப் (வானொலி)- 45
 2. ஏ.ஜே.எம். பிரோஸ் (நவமணி/அமைச்சு ஊடக பிரிவு) – 45
 3. புர்கான் பீ. இப்திகார் (வானொலி) – 43
 4. ஐ.எம். இர்ஷாத் (எங்கள் தேசம்)- 43
 5. கலைவாதிகலீல் (நவமணி) – 42
 6. ஸமீஹா ஸபீர் (தொலைக்காட்சி)- 42
 7. ஆதில் அலி சப்ரி (நவமணி)- 41

வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(எம்.எஸ்.எம்.ஸாகிர், யூ.கே. காலிதீன், பாருக் சிகான், ஏ.எஸ்.எம்.ஜாவித், அஷ்ரப் ஏ. சமத், எஸ்.ஏ. கரீம், அஸீம் கிலப்தீன் என்.எம். அப்ராஸ், முஹம்மதலி)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*