2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகளை வெளியிட்டது ஏன்?

(2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகளை வெளியிட்டது ஏன்?)

இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய குற்றி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் 2000, 1500, 500 ரூபா நாணய குற்றிகள் வெளியிடப்பட்டன.

முதன்முறையாக பெரிய தொகையில் வெளியான நாணய குற்றிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிக பேசப்பட்டு வருகின்றன.

புதிய நாணய குற்றிகளின் வெளியீடு தொடர்பில் மத்திய வங்கி உத்தியோகபூர்வ இணைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளது.

புத்த ஜயந்தியின் 2550 வருடங்களை பூர்த்தி செய்வதை நினைவு கூரும் வகையில் இந்த நாணய குற்றிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த நாணய குற்றி “பனி மலை” சின்னத்திலான வெள்ளி உலோகத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு பாரம்பரிய விடயங்களை நினைவு கூரும் வகையில் மத்திய வங்கியினால் நாணயத்தாள் மற்றும் நாணயக் குற்றிகள் வெளியிடுவது வழக்கமான விடயமாகும்.

அதற்கமைய முதல் முறையாக நாணய குற்றி ஒன்று 1957ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

WhatsApp Image 2018-06-22 at 15.22.16

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*