39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ள இலங்கை
2025ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில், 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க உள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜிதா ஹேரத் தெரிவித்தார். இந்த நடவடிக்கையால் இந்தியா உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருவதை எளிதாக்கும் என குறிப்பிட்டார்.
சவூதி தூதரக ஏற்பாட்டில், இலங்கையில் சர்வதேச அரபு மொழித்தினம்
இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச அரபு மொழித்தினம் இன்று -18- கொழும்பில் நடைபெற்றது. பிரதி வெளிவிவகார அமைச்சரும், சவூதி அரேபிய தூதரக அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர். 450 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பேசப்படும் மற்றும் கிட்டத்தட்ட…
“தான் பொய்யான சான்றிதழ்களை முன்வைத்திருந்தால், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்”
தனது சகல கல்வித் தகைமைகளையும் இன்று (18) பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சமர்ப்பித்திருந்தார். தனது சான்றிதழ்களை சமர்ப்பித்த பின்னர் உரையாற்றுகையில் இவைகள் பொய்யாக இருக்கும் பட்சத்தில் அல்லது தான் பொய்யான சான்றிதழ்களை முன்வைத்திருந்தால், அது குறித்து நிரூபிக்கப்படும் பட்சத்தில்…
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு மானியம்
தற்போதைய தேங்காய் நெருக்கடிக்கு தீர்வாக தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் சமந்த வித்யாரத்த தெரிவித்துள்ளார். நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் 55,000 மெற்றிக் தொன் உரத்தில் 27,500 மெற்றிக் தொன் தென்னை விவசாயிகளுக்கு வழங்கப்படும்…
வாகன இறக்குமதிக்கு அனுமதி, டாலர் நெருக்கடி வருமென சந்தேகிக்க வேண்டாம்
பெப்ரவரி முதலாம் திகதி முதல் தனிப்பட்ட பாவனைக்கான கார்களை இறக்குமதி செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர திசாநாயக்க பாராளுமன்றத்தில் இன்று (18) தெரிவித்தார். “இதனால் மீண்டும் டொலர் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகம் வேண்டாம், மத்திய வங்கியுடன் நீண்ட நாட்களாக…
கொட்டகலையில் லயன் குடியிருப்பில் தீ விபத்து
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் 10 வீடுகள் கொண்ட 6ஆம் இலக்க தொடர் லயன் குடியிருப்பில் இன்று (18) முற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன்,…
Paye tax இல் ஏற்படவுள்ள மாற்றம்
பாராளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் போது Paye tax தொடர்பில் அவர் வௌியிட்ட விடயம் கீழே தரப்பட்டுள்ளது. “நாங்கள் மூன்றாவது மதிப்பாய்வைத் தொடங்கியபோது, எங்கள் முன்மொழிவுகள் தொழில் வல்லுநர்களுக்கு விதிக்கப்பட்ட வருமான வரி பற்றியது. மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கினோம். வரி வரம்பு…
COPE தலைவராக ஹர்ஷ நியமனம்
பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று அறிவித்தார்.பொது நிதி தொடர்பான குழுவின் (COPF) தலைவராக SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக…
மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம்
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதாக கூறி, நிதி மோசடி செயற்பாடு ஒன்று இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தங்கள் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி வட்ஸ்அப் தொடர்புகளை உருவாக்கி…
பாடசாலையில் விளையாடிய மாணவன், மரக்கிளை விழுந்து மரணம்
அநுராதபுரம், ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றின் முற்றத்திலிருந்த மரத்தின் கிளை ஒன்று முறிந்து விழுந்ததில் பாலர் பாடசாலை சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (16 ) இடம்பெற்றுள்ளது. ஹொரவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த…