இலங்கை வரலாற்றிலே முதல் முதலாக உருவாக்கப்பட்ட வேறுபட்ட – வித்தியாசமான வலைத்தளம். எந்தவொரு கட்சியிடமோ – ஜமாஅத்திடமோ, இயக்கத்திடமோ , நிறுவனத்திடமோ மறைமுகமாகவோ நேர்முகமாகவோ உதவிகளோ அனுசரனைகளோ பெறாமல் இயங்கிவரும் ஒரேயொரு சுயாதீனமான இணையத்தளமே இந்த முஸ்லிம் வாய்ஸ் www.muslimvoice.lk ஆகும்.
இலங்கையில் எத்தனையோ முஸ்லிம்களுக்காக இணையத்தளங்கள் இருந்தும் அவைகள் அனைத்தும் எதோ ஒரு அமைப்புக்கோ – அரசியல் கட்சி, அரசியல் வாதிக்கோ – அவர்களுக்கு சார்பாக மறைமுக அனுசரணை வழங்கிக்கொண்டிருக்கும் இணையத்தளங்களே அதிகமாகக் காணக்கிடைக்கின்றது. இந்த இணையத்தளம் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி ஏனைய இனத்தவர்களுக்கும் பயன்படும் விதத்தில் மும்மொழிகளிலும் அரசியல், பொருளாதாரம், கல்வி, கலாசாரம், சமயம், மருத்துவம், உள்நாட்டு வெளிநாட்டு செய்திகள்இ மற்றும்ன ஒற்றுமை ஆகியவற்றை விருத்தி செய்யக்கூடிய கட்டுரைகளுடனும் செய்திகளுடனும் வெளிவருகிறது.
ஆனால், முஸ்லிம் வாய்ஸ் இணையத்தளம் எட்டு கோணங்களை (8 பட்டம்) உடைய ஒரு சுவாரஷ்யமான ஒரு வலைத்தளமாகும்.
1. மார்க்கம் (உலக இஸ்லாமிய மார்க்க நிகழ்வுகள்)
2. கலை (முஸ்லிம்களின் உள்நாட்டு – வெளிநாட்டு கலைகள்)
3. கல்வி (பொதுவான மற்றும் இஸ்லாமிய கல்வி)
4. கலாசாரம் (இஸ்லாமிய கலாசாரம் – இஸ்லாமிய நாகரீகம்)
5. அரசியல் (முஸ்லிம்களுக்கு அன்றாட நடக்கும் பிரச்சினைகளை முன்வைப்பது)
6. இஸ்லாமிய நிகழ்சிகள் (உலக அரங்கில் இடம்பெறும் இஸ்லாமிய நிகழ்வுகள்)
7. விளையாட்டு ( உள்நாட்டு வெளிநாட்டு விளையாட்டு நிகழ்சிகள்)
8. பொழுதுபோக்குகள் ( உள்நாட்டு வெளிநாட்டு பொழுதுபோக்கு நிகழ்சிகள்)
எதிர்காலத்தில் இந்தத் தளம் மும்மொழியிலும், எல்லா மக்களுக்கும் , எல்லா மொழி பேசுபவர்களுக்கும் இயங்கும்.
தெரிவிப்பது நாங்கள் – தீர்மானிப்பது நீங்கள்.