• Sun. Oct 12th, 2025

சர்க்கரை நோய்க்கு மோங்க் பழம்

Byadmin

Dec 18, 2018

(சர்க்கரை நோய்க்கு மோங்க் பழம்)

சர்க்கரை நோய்க்கு சிறந்த பழமாக மோங்க் என்ற பழம் இந்திய விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்திலிருந்து பாலம்பூர் பகுதியில் விளைவிக்கப்படுகிறது.

இந்த பழத்தில், கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது அதேவேளையில் இனிப்பு சத்து அதிகமாக உள்ளது. இனிப்பு சத்து அதிகமாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் உண்பதற்கு ஏற்ற பழம் இது ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைக்கு பரிசோதனை முறையில் விளைவிக்கப்படும் இந்த மோங்க் கொடிகள் நன்றாக வளர்ந்து போதிய விளைச்சலைக் கொடுத்துள்ளது.இது குறித்து ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் சஞ்சய் குமார் தெரிவிக்கையில், இந்தியாவில் சுமார் 6 கோடி பேர் வரை சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் இதை உண்பதால் இன்சுலின் சுரப்பை அதிகரித்து சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.

மேலும் மோங்கு பழத்திலிருந்து சாற்றை எடுத்து சோதனை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர்கள், இதனை அடுத்த கட்ட முயற்சிக்கு மேம்படுத்தி எந்த வகையில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

பல்வேறுபட்ட சோதனைகளுக்கு பிறகு இந்த முறை அமலுக்கு வரும் தருவாயில் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த பழம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *