• Mon. Oct 27th, 2025

குவைத் – இலங்கை , விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Byadmin

Oct 27, 2025

கடந்த 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத் விமான சேவையின் இலங்கைக்கான விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பமானதுடன் அதன் ஆரம்ப பயணமாக, மங்கள விமானம் திங்கட்கிழமை (27) அன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

முதல் மங்கள பயணத்திற்காக ஏ- 320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து திங்கட்கிழமை (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த விமானம் இதன்போது நீர் பாய்ச்சு வரவேற்கப்பட்டது.

இந்த விமானத்தை வரவேற்பதற்காக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜயரத்ன, இலங்கைக்கான குவைத் பதில் தூதர் அல் முஹானா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குவைத் விமான நிலையத்திற்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான விமானங்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *