• Sat. Oct 11th, 2025

உடம்பில் உள்ள மொத்த சளியையும் வியர்வை மூலமே வெளியேற்றணுமா??… இத குடிங்க..!

Byadmin

Oct 11, 2025

உடம்பில் உள்ள மொத்த சளியையும் வியர்வை மூலமே வெளியேற்றணுமா??… இத குடிங்க..!

முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் , உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டே தான் இருக்கும். ஒரு நாளைக்கு , ஒன்றில் இருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது.

உதாரணத்துக்கு ,தூசியோ, அலர்ஜியோ ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள், நம் மூக்கினுள் நுழைந்து விடும் போது , சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது.
அதாவது, இந்த மாதிரி தருணங்களில் நம் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் (Mast cells), ஹிஸ்டமைன் (Histamine) என்ற வேதி பொருளை உற்பத்தி செய்கின்றன.
இந்த ஹிஸ்டமைன் ஆனது , உடனே தும்மல் , அரிப்பு , மூக்கில் ஏதோ திணித்து வைத்தாற் போன்றதொரு உணர்வைத் தூண்டி விடுகிறது.

 

இவ்வாறு தூண்டப்பட்டவுடன் சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், சளியை தண்ணீரை போன்று கசிய விட ஆரம்பிக்கின்றன. சளிப்பிரச்சனையில் இருந்து விடுபட இயற்கை முறை மருத்துவத்தைப் பின்பற்றுவது நல்லது.

நம்முடைய உடலில் உள்ள சளியை எப்படி எளிமையாக விரட்டலாம்?

முதலில் மூன்று எலுமிச்சையை எடுத்துக் கொண்டு பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்பு, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அளவு தன்ணீர் எடுத்துக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் பாதியளவு ஆகும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும்.

இப்பொழுது, இரண்டு கப் நீர் ஒரு கப் அளவிற்கு சுண்டும்வரை கொதிக்க வைத்தவுடன், வெட்டி வைத்துள்ள எலுமிச்சையை அதில் நன்றாக பிழிந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதனை, இரவு தூங்குவதற்கு அரை மணி நேரம் முன்பு மிதமான சூட்டுடன் குடித்து விட்டு தூங்கினால் உடம்பில் உள்ள சளி எல்லாம் வியர்வையாக வெளியேறி விடும்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *