பிரெட்வுடன் சாப்பிட அருமையான அவகாடோ டிப்
தேவையான பொருட்கள் :
அவகாடோ (பட்டர் ஃப்ரூட்) – ஒன்று,
வெங்காயம் – ஒன்று,
தக்காளி – ஒன்று,
பச்சை மிளகாய் – ஒன்று,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அவகாடோவை தோல் நீக்கி உள்ளே உள்ள கதை பகுதியை மட்டும் தனியா எடுத்து மசித்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மசித்த அவகாடோ, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்கவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
இது பிரெட் உடன் சாப்பிட உகந்தது.