• Mon. Nov 3rd, 2025

மலக்குடல் புற்றுநோய் வரப்போகிறது என்பதை இந்த அறிகுறிகள் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்!!

Byadmin

Nov 2, 2025

மலக்குடல் புற்றுநோய் வரப்போகிறது என்பதை இந்த அறிகுறிகள் மூலம் ஈசியா கண்டுபிடிக்கலாம்!!

புற்றுநோயில் ஒருவகையான புற்றுநோய் தான் மலக்குடல் புற்றுநோய். சிலருக்கு மலக்குடல் புற்றுநோய் ஆரம்ப கால அறிகுறிகளை வெளிக்காட்டும். ஆனால் சிலருக்கு அமைதியாக இருந்து முற்றிய நிலையில் உணர்த்தும். பெரும்பாலானோர் மலக்குடல் புற்றுநோயினால் அனுபவித்த பிரச்சனைகளை மருத்துவர்களைத் தவிர மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளமாட்டார்கள்.

இதற்கு அந்த அறிகுறிகள் தென்படும் இடம் மற்றும் அனுபவித்த கஷ்டங்கள் வெளியே சொல்வதற்கு தர்ம சங்கடமாக இருப்பது தான். பலரும் குடல் புற்றுநோயையும், மலக்குடல் புற்றுநோயையும் ஒன்று என நினைத்து குழப்பமடைவர். ஆனால் உண்மையில் குடல் புற்றுநோய் ஒட்டுமொத்த பெருங்குடலையும், மலக்குடல் புற்றுநோய் வாய் பகுதியை மட்டும் பாதிக்கும்.

ஒவ்வொரு வருடமும் 8,000 அதிகமான அமெரிக்கர்கள் மலக்குடல் புற்றுநோயால் அவஸ்தைப்படுவதோடு, அதில் 1,000 பேர் இறக்கவும் செய்கின்றனர். இக்கட்டுரையில் மலக்குடல் புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உஷாராகிக் கொள்ளுங்கள்.

இரத்தக்கசிவு
மலம் வெளியேற்றும் போது, இரத்தம் கசிந்தால், அதை பலரும் மூல நோய் என்று சாதாரணமாக நினைத்து விட்டுவிடுவார்கள். ஆனால் ஒருவருக்கு தொடர்ந்து இரத்தம் கலந்து மலம் வெளியேறினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

அரிப்பு
மலம் வெளியேற்றும் பகுதியில் தொடர்ச்சியான அரிப்புக்களை சந்தித்தால், அதுவும் மலக்குடல் புற்றுநோய்க்கான ஆரம்ப கால அறிகுறியாகும்.

கட்டி
மலம் வெளியேற்றும் ஆசன வாய் பகுதியில் கட்டி இருந்தால், சாதாரணமாக விடாமல், உடனே மருத்துவரை அணுகி பிரச்சனையை சொல்லுங்கள்.

வலி
ஆசன வாயில் கடுமையான வலி அல்லது மலம் வெளியேற்றும் பகுதியானது பாரமாக இருக்குமாயின், அதுவும் மலக்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

குடலியக்க மாற்றம்
குடலியக்கம் அல்லது மலம் வெளியேற்றுவதில் அசாதாரண மாற்றங்களை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை உடனே அணுகுங்கள். ஏனெனில் இதுவும் ஓர் அறிகுறி.

அசாதாரண வெளியேற்றம்
மலப்புழை வழியே அசாதாரணமாக ஏதேனும் வெளியேற்றத்தைக் கண்டால், அதுவும் மலக்குடல் புற்றுநோய் இருப்பதற்கு வாய்ப்புள்ளது என்று அர்த்தம்.

வீங்கிய நிணநீர் முனைகள்
மலப்புழை அல்லது ஆசன வாயில் உள்ள நிணநீர் முனைகள் வீக்கத்துடன் இருந்தால், அது மலக்குடல் புற்றுநோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *