• Sat. Oct 11th, 2025

கிரீன் டீ அருந்துவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

Byadmin

Jan 29, 2018

(கிரீன் டீ அருந்துவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?)

கிரீன் டீ நமது ஆரோக்கியத்தை மட்டுமில்லாமல் அழகை பாதுகாக்கவும் எந்தெந்த வகையில் உதவுகிறது என்பது பற்றி இந்த பகுதியில் காணலாம். சூரியனில் இருந்து வெளியாகும் புறஊதா கதிர்கள் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இக்கதிர்கள் சருமத்தில் எரிச்சல், குழிகள், கருமை போன்றவற்றை ஏற்படுத்தும். கிரீன் டீயை முகத்திற்கு அப்ளை செய்வதன் மூலம் இந்த பாதிப்புகளை சரி செய்யலாம்.

முகப்பருக்கள் வலியைத் தரக்கூடியவை. முகப்பருக்கள் அதிகமாக உள்ளவர்கள், முகத்திற்கு கிரீம் உடன் 2% மட்டும் கிரீன் டீயை கலந்து 6 வாரங்களுக்கு அப்ளை செய்து வந்தால், பருக்கள் குறைவதை பார்க்கலாம். டீயில் ஆன்டி – மைக்ரோபயல் மூலக்கூறுகள் உள்ளன. இவை கொசுக்கள், மற்றும் பூச்சிக்கடிகளால் உண்டான வீக்கங்கள் மற்றும் காயங்களை குணமாக்க உதவுகிறது. டீ பேக்கை வைத்து காயம் உள்ள இடத்தில் ஒத்திடம் கொடுத்தால் காயம் இருந்த இடம் தெரியாமல் போகும். கிரீன் டீயை முகத்திற்கு தொடர்ந்து எட்டு வாரங்கள் அப்ளை செய்வதன் மூலம், முகத்தில் உள்ள எண்ணெய் பசையானது குறையும். மேலும், எதிர்காலத்தில் முகப்பரு வருவது போன்ற பிரச்சனைகளும் குறைக்கப்படுகின்றன.

இரவு தாமதமாக தூங்குவதாலும், அதிக வேலையினாலும் கண்களுக்கு கீழ் கருவளையங்கள் உண்டாகக்கூடும். இதனை போக்க கண்களுக்கு மேல் டீ பேக்குகளை வைத்து 20 நிமிடங்கள் ஓய்வெடுக்கலாம். இதனால் கண்களில் உள்ள வீக்கங்கள் குறைவதோடு சுறுசுறுப்பும் அதிகரிக்கும். கிரீன் டீ ஆனது சருமத்தை இறுக செய்கிறது. இதனால் சருமத்துளைகள் அடைக்கப்படுகின்றன. டீ பேக்கை சருமத்திற்கு போடுவதன் மூலம் சருமத்தின் நிறம் மேம்படுத்தப்படுகிறது. இது சருமத்திற்கு மிகச்சிறந்த பாதுகாப்பானாகவும் பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *