(அமெரிக்காவின் இரகசியமான ட்ரோன் தொழில்நுட்பத்தை ஹெக் செய்த ஈரான்)
Sentienel RQ-170 என்ற அமெரிக்க ட்ரோன் எப்படி இருக்கும் என்பது வெளி உலகிற்குத் தெரியாது.
ஏனென்றால் அமெரிக்கா அதன் படத்தைக் கூட வெளியிடாமல் இரகசியமாக வைத்திருந்தது.மிக உயரமாகப் பறக்கக் கூடியதும், ரேடார் கண்களுக்கு அகப்படாது என்பதும் அதன் சிறப்பம்சங்கள். அந்தத் ட்ரோன் தான் ஒசாமா பின்லாடன் மறைவிடம் மீதான தாக்குதலில் பயன்படுத்தப் பட்டது.அது அனுப்பிய படங்களை தான் ஒபாமா வெள்ளை மாளிகையில் இருந்து பார்த்தார்.

2011ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகள்,ஈரான் மீது உளவு பார்ப்பதற்காக சென்டீனல் ட்ரோனை அனுப்பியிருக்க வேண்டும்.எது எப்படியோ “இயந்திரக் கோளாறு காரணமாக” ஈரானுக்குள் விழுந்து விட்டது.
சென்டீனல் ட்ரோனை ஆராய்ந்த ஈரானியர்கள் அதன் தொழில்நுட்பத்தை ஹேக் பண்ணி எடுத்து விட்டார்கள். பின்னர் அதே மாதிரி ஒரு ட்ரோன் தயாரித்து விட்டனர். Saegheh எனப் பெயரிடப் பட்டுள்ள ஈரானிய ட்ரோன், கிட்டத்தட்ட அமெரிக்க தொழில்நுட்பத்தை தழுவி அமைக்கப் பட்டது. இந்தத் தகவலை இஸ்ரேல் அறிவித்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இஸ்ரேலிய வான் பரப்பில் ஊடுருவி உளவுபார்த்த ஈரானிய ட்ரோன், இஸ்ரேலிய அப்பாச்சி ஹெலிகாப்டரிலிருந்து ஏவிய ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த ட்ரோன் தான் அமெரிக்க சென்டீனல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது. சிரியாவில், பால்மீராவில் உள்ள ஈரானியா படைத்தளத்தில் இருந்து ட்ரோன் வந்திருக்கலாம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
2012 ம் ஆண்டு, தென் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அனுப்பிய ஈரானிய ட்ரோன் ஒன்று, வட இஸ்ரேலில் அணுவாயுதங்கள் வைக்கப் பட்டுள்ள டிமோனா அணு உலை இருக்கும் இடத்தை உளவு பார்த்தது. அதைக் கண்ட இரண்டு F-16 இஸ்ரேலிய விமானங்கள் கடல் பக்கமாக விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தின.
(de Volkskrant, 15-2-2018)