காதலர்களுக்கு எமனாக மாறிய கால்வாய்
மஹியங்கனை பொலிஸ் பிரிவில் 17ஆவது கணுவ பகுதியில் வியானா கால்வாயிக்குள் கால் வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்ற சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் நேற்று (20) மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கால்வாயில்…
அதிகாலையில் நேருக்கு நேர் மோதிய பேருந்துகள் : 25 பேர் படுகாயம்
கேகாலை – கலிகமுவ பகுதியில் இன்று அதிகாலை, இ.போ.ச பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெரகொடவில் இருந்து கேகாலை நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்தும், கேகாலையில் இருந்து இரத்தினபுரி…
மீமுரே விபத்தில் நால்வர் பலி
மீமுரே கரம்பகொல்ல பகுதியில் நேற்று (20) மாலை வேன் ஒன்று கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக உயர்ந்துள்ளது. மீரிகம பகுதியைச் சேர்ந்த ஒரு குழு சுற்றுலாவிற்காக மீமுரே பகுதிக்கு சென்றபோது இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளனர். விபத்தில் சிக்கிய…
இலங்கையின் பெயரை உலகறியச் செய்த கலாநிதி நதீஷா
ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனமான உலக அறிவுசார் சொத்து அமைப்பு (WIPO) வழங்கிய 2025 ஆம் ஆண்டுக்கான “உலக அறிவுசார் சொத்து உலகளாவிய விருதுகள் விழாவில் ”சுற்றுச்சூழல் பிரிவு” விருதை வென்ற கலாநிதி நதீஷா சந்திரசேன, நாடு திரும்பியுள்ளார். அவர்…
கோர விபத்தில் இரு குழந்தைகள் உட்பட மூவர் பலி
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியின் வலது பக்கத்திற்கு இழுத்துச் சென்று எதிர் திசையில் பயணித்த பேருந்து மீது மோதிய விபத்தில் சாரதியும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். நாரம்மல பொலிஸ் பிரிவில் உள்ள நாரம்மல-கிரியுல்ல வீதியில் நேற்று (19)…
வத்தளையில் ஒருவர் படுகொலை
வத்தளை, ஹேகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த நபரின் வீட்டில் சனிக்கிழமை (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். முகமூடி அணிந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் வந்து, குறித்த நபரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு பூராகவும் திடீர் சோதனை நடவடிக்கை
நாடு முழுவதும் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 1,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் வழிகாட்டுதலின் கீழ், 14,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரைக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, 46 வாகனங்கள்…
விமான நிலையங்களுக்கு அருகில் பட்டம் பறக்கவிட தடை
கட்டுநாயக்க விமான நிலையப் பகுதிக்குள் பட்டம் பறக்கவிடுவதை தவிர்க்குமாறு விமான நிலைய முகாமைத்துவ பிரிவின் பிரதானி அருண ராஜபக்ஷ பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அறிவித்தலைப் புறக்கணிப்பவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். “விமான நிலையத்தைச்…
சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான…
வயலில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை ; தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணை
குருணாகல், மாவத்தகம, பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் உள்ள வயலில் நேற்று (17) பிற்பகல் பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை விட்டுச் சென்ற தாயை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பரகஹதெனிய, சிங்கபுர பிரதேசத்தில் அமைந்துள்ள வயலில் உள்ள மரத்திற்கு அடியில்…