வத்தளை, ஹேகித்த, அல்விஸ்வத்த பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டில் சனிக்கிழமை (19) இரவு இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முகமூடி அணிந்த நான்கு பேர் முச்சக்கர வண்டியில் வந்து, குறித்த நபரை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.