• Sun. Oct 12th, 2025

Month: February 2023

  • Home
  • நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்து நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் உள்ளனர். நியூசிலாந்தின் வெலிங்டன் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 7.38 மணியளவில் ரிக்டர் அளவில் 6.1ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதால்,…

பல ரயில் பயணங்கள் திடீர் ரத்து! நடந்தது என்ன?

இன்று (13) இயக்கப்படவிருந்த அலுவலக ரயில்கள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரயில் இயந்திர சாரதிகள் தொழிற்சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், பயணிகள் கடும்…

வௌிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் பதுளை பொலிஸ் பிரிவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 370,000 ரூபாவை மோசடி செய்துள்ளதாக நேற்று முன்தினம் (11) பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி பதுளை…

பதிவு செய்யப்படாத மருந்துகள் குறித்து வௌியான அதிர்ச்சித் தகவல்!

நோயாளர்களுக்கு சிகிச்சைக்காக வழங்கப்படும் 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்து வகைகளின் கையிருப்பு தீர்ந்துவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சு கவனம் செலுத்த வேண்டுமென சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.…

தேர்தலுக்கு இடையூறு செய்யும் தரப்பினர்!

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ. திரு.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். தேர்தல் தொடர்பான இடையூறுகள் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசியல் அதிகாரம் மற்றும்…

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது..

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக திறைசேரியில் இருந்து 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று (11) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர்,  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குகளிப்பு திட்டமிட்டபடி…

மரண எண்ணிக்கை 25,000 ஆயிரமாகியது – 5.3 மில்லியன் மக்கள் வீடற்றவர்களாகினர், 900,000 மக்களுக்கு அவசர உணவு தேவை

துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000-க்கும் அதிகமாக உள்ளது. சனிக்கிழமையன்று துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 21,848 ஆக உயர்ந்தது, சிரியாவில் 3,553 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். பூகம்பங்களுக்குப் பிறகு சிரியாவில்…

காதலர் தினத்தன்று டியூட்டரிகளுக்குப் பூட்டு

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது. அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள் மீது பகிடிவதைகள் மற்றும் வேண்டத்தகாத ஒழுங்கீன…

இலங்கையில் நிலநடுக்க பகுதிகளுக்கு 2 புவியியலாளர் குழுக்கள் விரைவு

வெல்லவாய நகருக்கு அருகில் இன்று (11) காலை 2.3 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மொனராகலை மற்றும் புத்தளயை அண்மித்த பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கங்களை ஆய்வு செய்வதற்காக இரண்டு புவியியலாளர் குழுக்கள் அந்த பகுதிகளுக்கு சென்றதாக புவியியல் மற்றும் சுரங்க…

தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட அயாவை, தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் முன்வருகை

கடந்த திங்கள் கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமேற்கு சிரியாவில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடுபாடுகளுக்கு அடியில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. அதைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர். குழந்தை அயா (அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள்) மீட்கப்பட்டபோது,…