இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 313.77 ரூபாவாகவும் விற்பனை விலை 331.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அவள் நாட்டின் பெருமை
நாடு பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், பெண்களின் பெருமை, மரியாதை மற்றும் வலிமையைப் பிரதிபலிக்கும் “அவள் நாட்டின் பெருமை” என்ற தொனிப்பொருளில் இம்முறை மகளிர் தினத்தைக் கொண்டாடுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை சனத்தொகையில் அரைவாசிக்கும்…
தபால்மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு மார்ச் 28 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்டத்தரணி நிமால் ஜி.புஞ்சிஹேவாவிடம் ´அத தெரண´ வினவியபோது, எதிர்வரும்…
IMF இற்கு அனுப்பப்பட்ட கடிதம்!
சீன எக்சிம் வங்கியிடம் இருந்து நிதி உறுதிக்கான கடிதம் நேற்றிரவு அரசாங்கத்திற்கு கிடைத்ததாகவும், மத்திய வங்கி ஆளுநரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்ட உடன்பாட்டு கடிதம் அன்றைய தினம் இரவே சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஜனாதிபதி விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இலங்கையின்…
ரூபாவின் மதிப்பு இன்று, மேலும் உயர்ந்தது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று காலை டொலரின் கொள்வனவு விலை 318.30 ரூபாவாக அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று -07- காலை வெளியிடப்பட்ட வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை…
அவுஸ்திரேலியாவில் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய விமான சேவை வழங்குனரான Dnata குழுமம், இலங்கையில் இருந்து சமையல்காரர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது. இந்தத் தகவலை இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். சமீபத்தில் Dnata குழுமப் பிரதிநிதிகள் அமைச்சருடன் நடத்திய சிறப்புக்…
கொழும்பிற்கு வரும் வாகன ஓட்டுனர்களுக்கான அவசர அறிவிப்பு
குருந்துவத்தை பௌத்தலோக மாவத்தையில் அமைந்துள்ள விகாரையின் வருடாந்த பெரஹரா காரணமாக அப்பகுதியில் உள்ள வீதியை பயன்படுத்துவோர் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். விகாரையின் வருடாந்திர பெரஹரா இன்று இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. பெரஹரா பௌதாலோக மாவத்தை, கனத்த…
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி
தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டுவன்புலம்…
இந்த வாரத்தில் முட்டை இறக்குமதி
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பறவைக் காய்ச்சல் போன்ற நோய்கள் நாட்டுக்குள் நுழையும் அபாயம் இல்லை என அரச வர்த்தக பல்வேறு சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல முட்டைகள் குறித்து தற்போது…