• Sun. Oct 12th, 2025

Month: July 2023

  • Home
  • 21,000 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு தப்பிச்சென்ற கார்

21,000 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு தப்பிச்சென்ற கார்

கொட்டாவ-சித்தமுல்லை பெட்ரோல் நிரப்பும் நிலையமொன்றுக்கு காரில் வந்த ஒருவர், எரிபொருளை நிரப்பிவிட்டு பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். குறித்த நபர் 21,320 ரூபா பெறுமதியான எரிபொருளை நிரப்பிவிட்டு QR குறியீட்டை காண்பிப்பதாக கூறி பணம் செலுத்தாமல் தப்பிச் சென்றுள்ளார். இதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட…

இவரைத் தெரியுமா

இரண்டு வயது சிறுவனை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொல்ல முயற்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  இந்த நபர் மற்றும் இந்த சம்பவம் குறித்து. பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  அவரைப் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ்…

விபத்தில் இளைஞர் வபாத்

கற்பிட்டியில் வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. கற்பிட்டி, பள்ளிவாசல்துறை பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கற்பிட்டி திகழி, ஏத்தாளையைச் சேர்ந்த சஹாப்தீன் சல்மான் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளதாக…

16 ஆம் திகதி முதல் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை

தமிழகத்தின் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி நேரடி விமான சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் தினத்தந்தி நாளிதழ் செய்தி வௌியிட்டுள்ளது.  இந்தியாவின் அலையன்ஸ் எயார் (Alliance Air) நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கான நேரடி விமான சேவைகளை ஆரம்பித்திருந்தது. …

மன்னார் கடலில் கரை தட்டியுள்ள கப்பல் – ஏராளமான மக்கள் பார்வையிட விரைவு

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்  கப்பல் ஒன்று இன்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.…

நாளொன்றுக்கு 90 ஆயிரம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி!

தற்சமயம் நாளாந்தம் 90,000 பொதிகள் கொள்ளளவிலான திரிபோஷா உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் தெரிவித்துள்ளது.கடந்த காலத்தில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபட்டதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன குறிப்பிட்டார்.தீப்தி குலரத்ன மேலும் குறிப்பிடுகையில், திரிபோஷாவிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களின்…

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்!

உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரராக அறியப்படும் மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின் என்பவர் 7.5 கோடி ரூபாய் ( 30 கோடி இலங்கை ரூபாய்) அளவிலான சொத்து மதிப்பு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.பிச்சைக்காரர் என்றால் பொதுவாக வாழ்வாதாரத்திற்கே பொருட் இல்லாத நிலையில்,…

ஐஸ்லாந்தில் ஒரேநாளில் 2,200 நில அதிர்வுகள்

ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜாவிக்கை (Reykjavik) சுற்றியுள்ள பகுதியில் ஒரே நாளில் (நேற்று)  2,200 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன.  இதனை ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையமான IMO உறுதிப்படுத்தியுள்ளது.  Fagradalsfjall மலையின் கீழாக உள்நாட்டு நேரப்படி மாலை 4 மணிக்கு நில அதிர்வுகள்…

இலங்கைக்கு காலவகாசம்

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனை மீளச் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட காலத்தை நீடிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி கடனை செலுத்த 12 ஆண்டுகள் காலவகாசம் வழங்கப்பட உள்ளதாக இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத கூட்டுத்தாபனத்தின் (ECGC) தலைவர் எம். செந்தில்நாதன் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் த்ரெட்ஸிற்கும் இடையில் கடும் மோதல்

மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்ககப்படவுள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஜூலை 05 ஆம் திகதி தொடங்கப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் இதுவரை 30 மில்லியனுக்கும் அதிகமானமானோர் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. த்ரெட்ஸ்…