கோழி இறைச்சி விலை குறையும் அறிகுறி
வர்த்தக அமைச்சருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கோழி இறைச்சியின் விலை தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.டிசம்பர் பண்டிகைக் காலத்தில், தற்போது 1,250 ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1,100 ரூபாய்க்கு விற்பனை செய்ய வாய்ப்பு உள்ளதாக…
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!
கடந்த ஓகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது. இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த ஓகஸ்ட் மாதம் வரையிலான பணவனுப்பல்கள் 3,862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக…
தொற்று நோய் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
சுகாதார பூச்சியியல் அலுவலர்களின் பற்றாக்குறையால் தொற்றுநோய் நிலைமைகளை நிர்வகிப்பதில் நெருக்கடிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என பூச்சியியல் அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்சமயம் சுமார் 120 சுகாதார பூச்சியியல் அலுவலர்கள் பதவிகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் நஜித் சுமனசேன தெரிவித்தார்.இவ்வாறானதொரு நிலைமை இருந்தும்…
போலியான விசாவுடன் இளைஞன் ஒருவர் கைது!
போலியாக தயாரிக்கப்பட்ட விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்த இளைஞர் ஒருவர் நேற்று (8) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய…
மொராக்கோவின் மூன்றில் ஒரு பகுதி நிலநடுக்கத்தால் பாதிப்பு – உயிரிழப்பு 820 ஆக உயர்வு
மொராக்கோவில் ஏற்பட்ட சத்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 820 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டு உள்துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரின் வீடுகள் சேதமடைந்துள்ளன.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.மராகேஷுக்கு தென்மேற்கே 71 கிமீ (44 மைல்) தொலைவில் உள்ள…
இலங்கையின் தீவிர ஆதரவாளரை சந்தித்த ரோஹித் ஷர்மா
16ஆவது ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி இலங்கை வந்துள்ள நிலையில், இந்திய அணியின் தலைவர் ரோஹித் ஷர்மா இலங்கை கிரிக்கட் அணியின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவரான பேர்சி அபேசேகரவை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்று உள்ளார். இலங்கை…
உறங்கிக் கொண்டிருந்த மாணவன் திடீரென உயிரிழப்பு
கல்விப் பொதுத் தராதர உயர்தர கணிதப் பிரிவில் அதிகூடிய சித்தியடைந்த குருநாகல் மலியதேவ கல்லூரியின் மாணவர் ஒருவர், பெறுபேறுகள் கிடைத்த இரண்டு நாட்களில் இதய நோயினால் திடீரென உயிரிழந்துள்ளதாக வெல்லவ பொலிஸார் தெரிவித்தனர். வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோராய ரணவன பிரதேசத்தை…
மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை (09) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதேபோல், ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை…
இலங்கை குறித்து அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல்
இலங்கை போன்ற நாடுகளின் கடன் மறுசீரமைப்புத் திட்டங்களில் உள்நாட்டுக் கடனை உள்ளடக்குவது குறித்து ஆராய்வதற்காக அடுத்த வாரம் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், உலக வங்கியின் பிரதிநிதிகள், G20 குழு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும்…
கொழும்பு வாழ் மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!
2023 ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டித் தொடரை முன்னிட்டு கொழும்பு ஆர் பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை சுற்றி விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அதன்படி, போட்டிகள் நடைபெறும் செப்டம்பர் 9, 10, 12, 14, 15 மற்றும் 17 ஆம்…