நடமாடும் பள்ளிவாசலுக்கு உங்களை வரவேற்கின்றோம்.
2020 ஆம் ஆண்டு நடை பெறவுள்ள கோடைகால ஒலிம்பிக் போட்டிகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து வருகைதரும் விருந்தினர் களுக்கான ஆயத்தங்களை ஜப்பான் மேற்கொண்டு வரும் நிலையில் டோக்கியோ விளை யாட்டு மற்றும் கலாசார நிகழ் வுக்கான நிறுவனமொன்று வருகைதரும் முஸ்லிம்கள் தமது தாய்நாட்டில் இருப்பது போலவே உணரும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பள்ளிவாசலொன்றை உருவாக்கியுள்ளது.
2020 இல் வருகைதரவுள்ள முஸ்லிம்களுக்கு நாட்டிலுள்ள
பள்ளிவாசல்கள் போதுமான தாக இல்லாமல் போவதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. சர்வதேச சமூகத்தின் ஒரு அங்கமாக தன்னைக் கருதிக்கொள்ளும் நாட்டிற்கு இது ஒரு பிரச்சினையாகும் எனத் தெரிவித்த யாசூ திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதி காரியான யாசுஹா இனுயி, தனது நடமாடும் பள்ளிவாசல் தேவைப்படும் சந்தர்ப்பங் களில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கும் எனவும் தெரிவித்தார்,
வெளிப்படையானதும் விருந்தோம்பல் தன்மை கொண்டதுமான நாடு என்ற வகையில் எமது ஓமடெனாஷி (ஜப்பானிய விருந்தோம்பல் தன்மையை) முஸ்லிம் மக் களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம் என அவர் அண்மையில் வழங்கிய நேர் காணலொன்றில் தெரிவித்தார்.
முதலாவது நடமாடும் பள்ளிவாசல் இவ்வார . ஆரம்பத்தில் டொயோட்டா நகரில் அமைந்துள்ள ஜே லீக் உதைபந்தாட்ட மைதான மான டோயோட்டா விளை யாட்டரங்கிற்கு வெளியே திறந்து வைக்கப்பட்டது.
-மடவளை நியூஸ்-
டோயோட்டா கார் நிறுவ னத்தின் தலைமைக் காரி யாலமும் இந்நகரிலேயே அமைந்துள்ளது. மீளுருவாக்கம் செய் யப்பட்ட 25 தொன் நிறை கொண்ட ட்ரக் வண்டியில் மடித்து வைக்கப்பட்ட பகு திகள் விரிவடைந்து வாயில் உருவாவதோடு ட்ரக் வண் டியின் பரப்பு இரட்டிப்பாக மாறுகின்றது. 48 சதுர மீற்றர் (515 சதுர அடி) பரப்பளவு கொண்ட அந்த அறையில் 50 பேர் தொழுகையில் ஈடுபட முடியும்.
ஊட்புறப் பகுதியில் தொழு கையில் ஈடுபடுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள தோடு தொழுகைக்கு முந்திய வுழு செய்தல் மற்றும் கழுவிச் சுத்தம் செய்துகொள்ளும் பகுதிகளும் வெளிப்புறமாக அமைக்கப்பட்டுள்ளன.
2004ஆம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட சுனாமி காரணமாகப் பாதிக்கப்பட்ட இந்தோனேசிய மாணவர்கள் இந்த அறிமுக நிகழ்வில் பங்
குபற்றினர்.
இந்த நடமாடும் பள்ளி வாசல் ஜப்பானியர்கள் அல்லது உல்லாசப் பயணிகள் மற்றும் ஜப்பானுக்கு வருகை தரும் முஸ்லிம் உல்லாசப் பயணிகள் போன்ற முஸ்லிம் மக்களுக்கு மிகவும் முக்கி யமானது என 14 வயதான நூர் அஸீஸா தெரிவித்தார், இதனை நான் எனது நண்பர் களுக்கும் காண்பிக்க விரும் புகின்றேன் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜப்பானில் 100,000 தொடக்கம் 200,000 வரை யான முஸ்லிம்கள் வாழ்வதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இந் நடமாடும் பள்ளிவாசல் மக்களின் மனங்கள் உலகளா வியரீதியில் விரிவடைவதற்கு உதவும் என ஜப்பானிய அதிதியான டசுயா சகாகுசி தெரிவித்தார்.
வெளியிலிருந்து பள்ளிவா சலினுள் இருக்கும் மக்களைப் பார்த்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது எனவும் ஒசாக் காவின் சில்லறை வணிக நிறுவனமொன்றின் பிரதிநிதித் துவப் பணிப்பாளர் சகாகுசி. தெரிவித்தார்.