(உடல் சோர்வாக இருக்கிறதா..? அப்ப இதுதான் உங்க பிரச்சனை… இந்த உணவுகளை சாப்பிடுங்க..!)
உடலில் சத்துக்கள் இல்லாதது போல் தோன்றுகிறதா? உடல் சோர்வை உணர்கின்றீர்களா? அப்படியானால் சில வேளைகளில் நீங்கள் இரத்தசோகையினால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இரத்தத்தில் உள்ள செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை குறைவடைதலே இந்த இரத்தசோகை என அழைக்கப்படும். இவை என்பு மச்சைக்குள் உற்பத்தி ஆக்கப்பட்டு சுமார் 120 நாட்களுக்கு உடலைச் சுற்றி பயணிக்கும்.
செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் எண்ணிக்கை குறைவடைவதென்பது எமது உடலுக்கு பல்வேறு ஆபத்துக்களை கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதால் நாம் கட்டாயம் வைத்தியரை அணுக வேண்டும்.
செங்குருதிச் சிறுதுணிக்கைகளை எவ்வாறு அதிகரிக்கலாம்?
01. இரும்புச்சத்து
பின்வரும் உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தினை பெறலாம்.
– மாட்டிறைச்சி, ஈரல், சிறுநீரகங்கள், பசளைக்கீரை, உலர்பழங்கள், போஞ்சி, முட்டைமஞ்சள்கரு.
02. போலிக் அமிலம்
பிறப்புக் குறைபாடு ஏற்படுவதைத் தவிர்க்கும். பின்வருவனவற்றை உட்கொள்வதன் மூலம் உடலுக்குத் தேவையான போலிக் அமிலத்தைப் பெறலாம்.
– பச்சைத்தாவரங்கள், போஞ்சி, பருப்பு, கடலை வகைகள் மற்றும் விதைகள்.
03. விட்டமின் பி12
விட்டமின் பி12 அதிகளவில் உள்ள பின்வரும் பொருட்களை உட்கொள்வதன் மூலம், பி12 குறைபாடு ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
– மாட்டிறைச்சி, மீன், பாலுற்பத்திப் பொருட்கள் மற்றும் முட்டை.
04. கொப்பர் (செப்பு)
இந்த கொப்பர் செங்குருதிச் சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கு நேரடியாக உதவி புரியாவிடிலும், இந்தச் சத்து உள்ள உணவுப் பொருட்களை உட்கொள்வதன் மூலம் இரும்புச் சத்து குறைபாட்டை நீக்கலாம்.
– முட்டை, மீன், ஈரல், போஞ்சி வகைகள், செர்ரிபழங்கள் மற்றும் விதைகள்.
05. விட்டமின் ஏ
செங்குருதிச் சிறுதுணிக்கைகள் உற்பத்தி செய்யப்படுவதற்கு விட்டமின் ஏ உதவி புரிகின்றது.
– பச்சைத் தாவரங்கள், வத்தாளைக் கிழங்கு, கரட், சிவப்புமிளகு மற்றும் பழங்கள்.
மேற் கூறிய சத்துக்கள் உணவினால் பெறப்படுவது குறைவடையும் பட்சத்தில் கடைகளில் விற்கப்படும் பின்வரும் விட்டமின்களை உட்கொள்வதன் மூலம் போதியளவு சத்தினைப் பெறலாம்.
01. விட்டமின் சி
02. கொப்பர்
03. அயன்
04. விட்டமின் ஏ
05. விட்டமின் பி12
06. விட்டமின் பி9
07. விட்டமின் பி6
08. விட்டமின் ஈ