• Sun. Oct 12th, 2025

சத்தான வரகு ராகி கோதுமை தோசை

Byadmin

Aug 23, 2018

(சத்தான வரகு ராகி கோதுமை தோசை)

தேவையான பொருட்கள் :

வரகு அரிசி – 200 கிராம்
கோதுமை – 100 கிராம்
கேழ்வரகு – 100 கிராம்
உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம் – 2 டீஸ்பூன்
நெய் (அ) நல்லெண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை :

கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வரகு அரிசி, ராகி, கோதுமையை தண்ணீரில் 5 மணி நேரமும், வெந்தயம், உளுந்தை ஒரு மணி நேரமும் தனித்தனியாக ஊறவைத்து தனியாக அரைத்து கொள்ளவும்.

அரைத்த எல்லா மாவையும் ஒன்றாக கலக்கவும்.

இதில் தேவையான உப்பு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 5 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி, நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.

சத்தான வரகு ராகி கோதுமை தோசை தோசை ரெடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *