• Sun. Oct 12th, 2025

சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்

Byadmin

Sep 11, 2018

(சீனா வேண்டாம் அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்யுங்கள் – ஆப்பிள் நிறுவனத்துக்கு டிரம்ப் அறிவுறுத்தல்)

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் சீனப் பொருட்கள் குவிந்ததுடன் விலையும் மலிவாக கிடைப்பதால் அமெரிக்க பொருட்களின் வர்த்தகம் சரிந்தது. இது அமெரிக்க அதிபர் டிரம்பின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏற்கனவே, அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்ற கொள்கையை கடைப்பிடித்து வரும் டிரம்ப்,  சீனப் பொருட்களுக்கு 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி விதித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா கூடுதல் வரி விதித்தது. ஏற்கனவே இருக்கும் 25 சதவீத வரியுடன் தற்போது கூடுதல் வரியை விதித்ததால் அமெரிக்கா கடும் அதிருப்தி அடைந்தது.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் முதல் 200 பில்லியன் டாலர் மதிப்புள்ள சீனப் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரியை அமெரிக்கா விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக போர் மேலும் தீவிரமடைந்துள்ளது.
இந்த வர்த்தக போரில் அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் கடுமையான பாதிப்புக்களை சந்தித்து வருகிறது. பெரும்பாலான ஆப்பிள் போன்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தி செய்யப்பட்டு அமெரிக்காவில் இறக்குமதி செய்யும் போது ஆப்பிள் போன்கள் கூடுதல் வரிவிதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் ஆப்பிள் போன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆப்பிள் போன்களின் மீதான கூடுதல் வரிவிதிப்பை தவிற்க வேண்டுமானால் அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர்  குறிப்பிட்டுள்ளதாவது :-
சினாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது நாங்கள் கூடுதல் வரியை விதிப்பதால் ஆப்பிள் செல்போன்களின் விலை உயரலாம். ஆனால், ஆப்பிள் போன்கள் மீது பூஜ்ஜிய வரி விதிப்பதற்கும், வரி ஊக்கத்தொகை பெருவதற்கும் ஒரு சுலபமான தீர்வு உள்ளது.
அதன் உற்பத்தியை சீனாவில் இருந்து அமெரிக்காவிற்கு மாற்ற வேண்டும் இது தான் அந்த தீர்வு. எனவே, போன் உற்பத்தி தொழிற்சாலைகளை அமெரிக்காவில் உருவாக்குங்கள். வரிவிதிப்பை தவிற்பதன் மூலம் கிடைக்கும் சலுகைகளால் அமெரிக்க தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுவதை ஆப்பிள் நிறுவனத்தால் சரிகட்ட முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #USChinaTradeWar #DonaldTrump #Apple

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *