(தூர சேவைக்கான பேரூந்துகளில் ஆசன ஒதுக்கீட்டுக்கு இணையத்தள வசதி…)
தனியார் பேரூந்துகளை பயன்படுத்தி கொழும்பில் இருந்து தூர சேவைகளுக்கு பயணிகளின் சௌகரியம் கருதி ஆசனங்களை ஒதுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் www.ntcbooking.lk எனும் பெயரில் இணையத்தளமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, குறித்த இணையளமானது நேற்று(26) முதல் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இணையத்தள சேவையானது நேற்று(26) போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதற்காக பயணி ஒருவரின் பற்றுச் சீட்டுக்கு மேலதிகமாக 30 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக கொழும்பில் இருந்து கதிர்காமம் – யாழ்பாணம் – பதுள்ளை – அம்பாறை – தெனியாய – பஸ்ஸர – லுனுகல – அக்குரஸ்ஸ – திருக்கோவில் – மட்டக்களப்பு – பருத்தித்துறை – மடுல்சீமை – அனுராதபுரம் – தயகம – திருகோணமலை ஆகிய தூர சேவைகள் உள்ளிட்ட 35 சேவைகளுக்கான ஆசனம் ஒதுக்க முடியும் எனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.