(இலங்கைக்கு அருகாமையில் உருவாகியுள்ள தாழ் அமுக்கம்)
அடுத்த 72 மணி நேரத்தினுல் தாழ் அமுக்கம் ஒன்று இலங்கைக்கு அண்மையில் ,தென்கிழக்கு
அரேபியக் கடலில் உருவாகி ஒக்டோபர் 9 அல்லது 10 ஆம் திகதி பலமான சூறாவளியாக மாறும் சாத்தியமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
கடலின் வெப்பம் அரேபியக்கடல் எங்கும் உயர்வாக உள்ளதால் அதன் பாதையை கணிப்பதில் சங்கடங்கள் உள்ளன.
இந்த சூறாவளி ஓமான் ,பாகிஸ்தான் அல்லது குஜராத்தை நோக்கி நகரலாம்.
ஒரு மாதிரி (Model ) தென் இந்தியாவை நோக்கி நகரும் எனக் கூறிகின்றது .அவ்வாறு நடக்கின் இலங்கையின் வட ,வட மேல் மாகாணங்களில் காலநிலை மாற்றங்கள் நிகழலாம்.
இந்த சூறாவளி உருவாகும் போது இலங்கையில் பலத்த மழை பொழிய வாய்ப்புள்ளது பல இடங்களில் திடீர் வெள்ள நிலமைகள் (Flash Flood)ஏற்படலாம் .
லுபான் (#Luban) என்பது அறேபிய மொழிச் சொல்லாகும் ஓமான் நாட்டால் பெயரிடப்பட்டது.
இதே வேளை இலங்கைக்குக் கிழக்காக தென் மேல் வங்காள விரிகுடாவில் ஒக்டோபர் 7/8 அளவில் ஒரு தாழ் அமுக்கம் உருவாக வாய்ப்புள்ளது.
அவதானங்களுடன் ,அழிவைத் தவிர்க்க இறைவனை பிரார்திப்போம்.
-MN