நாடாளுமன்ற அமர்வுகளை நிறைவு செய்து, எதிர்வரும் 16ஆம் திகதி வரை நாடாளுமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைத்துள்ளமைத் தொடர்பில் சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று -31- நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சராக தனது கடமைகளை பொறுப்பேற்ற போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளமைத் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களே ஜனநாயகத்தின் வலிமையான செயற்பாடான தேர்தலை தொடர்ந்து ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பது புதிய விடயமல்லவெனவும் சகல ஜனாதிபதியும் சந்தர்ப்பத்துக்கு அமைய நாடாளுமன்றத்தை ஒத்தி வைக்கமுடியுமெனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் விவசாயத்துறைக்கு முக்கியத்துவத்தை வழங்கி பொரளாதாரத்தை மீண்டும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் பொருளாதார அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிரதமர் தெரிவித்துள்ளார்.