• Sun. Oct 12th, 2025

பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு

Byadmin

Nov 5, 2018

(பிரான்சிடம் இருந்து சுதந்திரம் பெறுவது தொடர்பாக நியூ கலிடோனியாவில் பொது வாக்கெடுப்பு)

பிரான்ஸ் நாட்டின் காலனியாக பிரெஞ்சு பசிபிக் பிரதேசமான நியூ கலிடோனியா உள்ளது. அங்கு பிரான்சிடம் இருந்து நியூ கலிடோனியா சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இந்த நிலையில், நியூ கலிடோனியா, பிரான்சின் ஒரு பகுதியாக நீடிக்க வேண்டுமா அல்லது சுதந்திரம் பெற்று தனிநாடாக வேண்டுமா என்பது குறித்து மக்களின் கருத்தை அறிய பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.

இந்த வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. வாக்காளர்கள் திரளாக வாக்குச்சாவடிகளுக்கு திரண்டு வந்து நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

இந்த நியூ கலிடோனியாவில் மின்னணு சாதனங்கள் தயாரிப்பதற்கு தேவையான நிக்கல் திரளாக கிடைக்கிறது. பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் இந்தப் பகுதியை மிக முக்கிய பகுதியாக பிரான்ஸ் அரசு கருதுகிறது.

நியூ கலிடோனியா மக்களில் பெரும்பாலோர், தங்கள் பகுதி பிரான்சின் ஒரு பகுதியாக திகழ வேண்டும், சுதந்திரம் தேவையில்லை என்று கருதுவதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே பிரிவினையாளர்கள் இந்த பொது வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என சொல்லப்படுகிறது. #NewCaledonia #IndependenceReferendum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *