(ஜீ. எல். பீரிஸ், வாசுதேவ உற்பட ஐந்து பேர் நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு ஆதரவாகவும் 5 மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக 13 மனுக்கள் நேற்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர் ஜீ. எல். பீரிஸ், சட்டத்தரணி பிரேமநாத் சீ. தொலவத்த, பேராசிரியர் சன்ன ஜயசுமன,அமைச்சர்களான உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இந்த மனுக்களை இன்று உயர்நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளனர்.