• Sat. Oct 11th, 2025

காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா? தெரிந்துக்கொள்ளுங்கள்..

Byadmin

May 27, 2019

(காலை உணவை தவிர்த்தால் சுகர் வருமா? தெரிந்துக்கொள்ளுங்கள்…)

காலை உணவை தவிர்ப்பதன் மூலம், குறைப்பதன் மூலம் பலவித நோய்கள் ஏற்படுமாம். சமீபத்திய ஆய்வு ஒன்றில் காலை உணவை தவிர்த்தால் நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பிருக்கிறதாம். 

 உடல் எடையை குறைக்க நினைக்கும் பலர் காலை உணவை தவிர்கின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறானது. காலை உணவை தவிர்ப்பதன் மூலம் உடலில் இன்சுலின் உற்பத்தி அதிகரிக்கும்.

 அதுவே மன அழுத்தம் ஏற்பட வழிவகுத்து நீரிழிவு நோய் உருவாக முதல்படியாக அமையும். ஆய்வின் படி வாரத்தில் குறைந்தது 4 நாட்களுக்கு காலை உணவு சாப்பிடாவிட்டால் நீரிழிவு நோய் ஏற்பட 55% வாய்ப்பு உள்ளது என தெரியவந்துள்ளது.

 மேலும், நீரிழிவு பரம்பரை நோயாக கருதப்பட்டது. தற்போது உணவு பழக்க வழக்கம் மூலமும் ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது. அதிலும், நீரிழிவு நோய் ஏற்படுவதற்கு காலை உணவை தவிர்ப்பதே ஒரு காரணம் என உலக சுகாதார நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *