• Mon. Oct 13th, 2025

மூட்டுவலியை ஒரே வாரத்தில் குணப்படுத்த அருமையான சித்த வைத்திய குறிப்புக்கள்..!

Byadmin

Jan 16, 2018

(மூட்டுவலியை ஒரே வாரத்தில் குணப்படுத்த அருமையான சித்த வைத்திய குறிப்புக்கள்..!)

வாத நோயினால் உண்டாகும் மூட்டுவலியை போக்கும் கை மருத்துவப் பக்குவங்களை இங்கே அறிந்து கொள்வோம்.

நன்னாரி வேரைத் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, அந்தத் தண்ணீரைக் குடித்தால் வாத நோய் உடனே குணமாகும்.

எட்டி மரத்தின் அடியில் இருக்கும் உள் மரப் பட்டையைக் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் இரண்டு ஸ்பூன் பொடியை சுடு நீரில் கலந்து குடித்தால் வாத நோயில் இருந்து விடுபடலாம்.

வாதநாராயணன் இலை, அதன் வேர்ப்ப்ட்டை இரண்டையும் நன்றாகப் பொடி செய்து, குடிக்கும் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், வாத நோய் வராமல் தடுக்கலாம்.

புங்க மரத்தின் வேரை எடுத்து நன்றாக அரைத்து வாத வீக்கத்தின் மீது பற்றுப்போட்டால், வீக்கம் உடனே குறையும்.

இலுப்பை இலை, ஆமணக்கு இலை, வாதமடக்கி இலை, மாவிலங்கு இலை, நொச்சி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து, பொடிப்பொடியாக நறுக்கி ஒரு துணியில் கட்டி ஆவியில் வேகவைத்து ஒத்தடம் கொடுத்தால் வாத வீக்கம் குணமாகும்.

வாதத்தால் வலி ஏற்பட்டால், வலி உள்ள இடத்தில் எருக்கம் பாலைத் தேய்த்தால் வலி குறையும்.

நொச்சி இலையைப் போட்டுக் கொதிக்க வைத்த நீரில் தினமும் குளித்தால் வாத நோயில் இருந்து தப்பிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *