• Fri. Nov 28th, 2025

ஆஸ்துமாவால் மூச்சுத் திணறுகிறதா..? இதோ அருமையான சித்த வைத்திய குறிப்புக்கள்..!

Byadmin

Nov 23, 2025

(ஆஸ்துமாவால் மூச்சுத் திணறுகிறதா..? இதோ அருமையான சித்த வைத்திய குறிப்புக்கள்..!)

ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் கை மருத்துவம்

1. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் துாதுவளைப் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சி, பாலைக் குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

2. தினமும் மதிய உணவில், முசுமுசுக்கை இலை, வெங்காயம் இரண்டையும் பொடியாக நறுக்கி நெய் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால், ஆஸ்துமாவால் ஏற்படும் மூச்சுத் திணறல் குணமாகும்.

3. வில்வ மரத்தின் கொழுந்து இலைகளுடன் மிளகையும்(8) அடிக்கடி காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்றால், ஆஸ்துமா குணமாகும்.

4. ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் இரவு படுப்பதற்கு முன் எலுமிச்சைச் சாற்றுடன் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

5. 100 மி.லி. ஆட்டுப் பாலில் ஆடாதொடா இலையை நன்றாக அரைத்துக் கலக்கிக் குடித்தால் ஆஸ்துமா குணமாகும்.

6. சர்க்கரையைப் பாகுபோல் செய்து, அதில் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, யூகலிப்டஸ் தைலத்தைச் சேர்த்துத் தின்றால் ஆஸ்துமா நோயும், ஆஸ்துமாவால் ஏற்படும் இழுப்பும் குறையும்.

7. ஆஸ்துமாவால் ஏற்படும் இழுப்பு குறைய, சாம்பார் வெங்காயத்தைச் சாறு பிழிந்து கண்ணில் சில சொட்டுகள் விட்டால் குணம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *