(உங்க வீட்டில் எலி தொல்லையா? இதை செய்யுங்கள் ஒழித்துவிடலாம்..!)
வீட்டில் நமக்கு தொல்லைகளை கொடுக்கும் எலியை ஒழிக்க இயற்கை வழி தீர்வுகள் இதோ, எலிகளை ஒழிக்கும் இயற்கை தீர்வுகள்?
செல்லப் பிராணியான பூனையை உங்கள் வீட்டில் வளர்த்து வந்தால், அது வீட்டிற்குள் எலியை நுழையவே விடாது.
புதினாக் கீரையின் நறுமணம் நம் வீட்டில் இருந்தாலே, எலிகள் வீட்டில் வராது. எனவே எலியின் பொந்து உள்ள இடத்தில் ஒரு காட்டன் துணியில் புதினா எண்ணெயை நனைத்து வைத்தால் போதும்.
எலிகள் மனிதனின் முடியை கண்டாலே, வீட்டிற்குள் வராது. ஏனெனில் எலிகள் முடியை விழுங்கினால் இறந்துவிடும்.
வீட்டில் எலி பொந்துகள் உள்ள இடத்தில் சிறிதளவு அம்மோனியாவை தெளித்து வைக்க வேண்டும். ஏனெனில் அதன் நாற்றத்தில் எலிகள் இறந்து விடும்.
எலிகளை இயற்கையாகவே அழிக்க, மாட்டுச் சாணத்தை பயன்படுத்தலாம். எப்படியெனில் மாட்டுச் சாணத்தை சிறு உருண்டையாக பிடித்து, அதன் மேல் சீஸ் தடவி வைக்க வேண்டும். அதனை சாப்பிடும் எலிகள் இறந்து விடும்.
பொம்மை கடைகளில் பிளாஸ்டிக்கில் கிடைக்கும் ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் வைத்தால், எலிகள் அதற்கு பயந்து ஓடிவிடும்.
வீட்டில் எலி உள்ள இடத்தில் சிறிதளவு மிளகுத் தூளை தூவி விட வேண்டும். இதனால் எலி மூச்சு விட முடியாமல் உடனே இறந்து விடும்.
பிரியாணி இலையின் வாடை எலிகளுக்கு பிடிக்காது. எனவே பிரியாணி இலையை பொடி செய்து, எலி உள்ள இடத்தில் தூவி விட வேண்டும்.
இயற்கை பொருட்கள் மூலம் எலிகளை அழிக்க பயன்படும் ஒரு பொருள் தான் வெங்காயம். அதை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் வைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பேபி பவுடரை எலி உள்ள பொந்தில் தூவ வேண்டும். அந்த நறுமணம் மூலம் எலிகள் இறந்துவிடும்.