வாய்ப்புள்ளதாக அமெரிக்க அரசின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
சிஐஏ தனது இந்த கருத்தை அமெரிக்க அரசாங்கத்தின் பிற பிரிவுகளான காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற துறைகளிடத்திலும் தெரிவித்துள்ளது.
இளவரசர் சல்மானுக்கும் கஷோகி கொலைக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று சவுதி மறுத்து வந்தது. தற்போது சிஐஏவின் இந்த கணிப்பு அதனைப் பொய்யாக்கியுள்ளது.
சிஐஏ-வின் இந்த உளவுத்தகவலை முதன் முதலில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டது.
ஆனால் இது குறித்து வெள்ளை மாளிகையும், அமெரிக்க அரசுத் துறையும் இது குறித்து கருத்து கூற மறுத்துவிட்டன.
இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சவுதி தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த மதிபீடு உறுதியாகத் தவறானது” என்று மறுத்துள்ளார்.
சிஐஏ சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் கஷோகி கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்திருப்பதற்கு ஆதாரமாக இளவரசரின் சகோதரரும், அமெரிக்காவுக்கான சவுதி தூதருமான காலேத் பின் சல்மான், கஷோகியுடன் உரையாடிய தொலைபேசி உரையாடலைக் கூறுகிறது.
அதாவது கஷோகி, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்று வேண்டிய ஆவணங்களைச் சேகரித்துக் கொள்ளுமாறு காலேத் தொலைபேசியில் தெரிவித்ததை சிஐஏ தனது ஆதாரமாகக் கருதுகிறது.