(இரத்தத்தில் வெள்ளையணுக்களை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான உணவுகள்..!)
வெள்ளையணுக்கள் எனப்படும் லூக்கோசைட் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தொகுதிக்கு அத்தியவசியமானது. இது பக்டீரியா, வைரஸ் நுண்ணங்கிகளிற்கு எதிராகச் செயற்பட்டு உடலைத் தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கின்றது. இது எலும்பு மச்சையில் இருந்து உருவாகி, இரத்தத்தின் மூலம் உடல் முழுவதும் பரவியுள்ளது. வெள்ளையணுக்களில் ஜந்தாக பிரிக்கப்படும், அவை: நியூட்ரோபில்ஸ், லிம்போசைட், மோனோசைட், ஈசனோபில்ஸ் மற்றும் பேசோபிள்ஸ்.
வெள்ளை அணுக்களின் வேறுபாட்டிற்கு காரணம் என்ன?
வெள்ளையாணுக்களின் எண்ணிக்கை சராசரியாக 4500-11000 செல்கள் ஒரு மைக்ரோலீட்டரில் காணப்படும். இதன் அளவு 3000 விட குறைந்தால் தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதையும், 1000 விட குறைவடைந்தால் அதிகளவான தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கருதப்படுகிறது.
வெள்ளையணுக்கள் குறைவடைவதை அறிந்து கொள்வது எப்படி?
பொதுவாக தொற்றுக்கள் உடலில் அதிகரிக்கும் வரை வெள்ளையணுக்கள் குறைவடைவதை அறிந்து கொள்ள முடியாது. சோர்வு, சுவாசப் பிரச்சினை, வலிமையின்மை, தொற்றுக்கள் ஏற்படுதல் போன்ற சந்தர்ப்பங்களின் போது இரத்த பரிசோதனை செய்வதன் மூலம் வெள்ளையணுக்கள் குறைவடைவதை அறிந்து கொள்ளலாம்.
வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது எப்படி?
நுண்ணங்கிகள்உடன் போரிடும் போதே இதன் எண்ணிக்கை குறைவடைகிறது. போதியளவு விட்டமின்கள், கனியுப்புக்கள் அடங்கிய உணவுகளை உட்கொள்வதன் மூலம் வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய முடியும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும்.
1. விதைகள் மற்றும் தாணியங்கள் (விட்டமின் ஈ, சிங்)
விதைகள் மற்றும் தாணியங்களில் இருந்து அதிகளவான் விட்டமின் ஈ கிடைப்பதனால் இவை பக்டீரியா தொற்றுக்களை அழிக்கும் பீட்டா செல்களை உருவாக்குவதில் உதவி புரிகின்றது.
சிங் அதிகளவான வெள்ளை அணுக்கள் உருவாகுவதற்கு கைகொடுக்கின்றது. பூசனிக்காய் விதை, தர்ப்பூசனி விதை, பூண்டு போன்றவற்றில் அதிகளவான சிங் இருப்பதனால் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. உணவுகளில் போதியளவு விட்டமின் ஈ மற்றும் சிங் கிடைக்கவில்லை என்றால் உணவு நிரப்பிகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்வார்கள்.
கிறீன் டீயில் அதிகளவான அண்டிஒக்ஸிடன் இருப்பதனால் இவை தொற்றுக்களிற்கு எதிராகச் செயற்பட்டு நோய் எதிர்ப்பு தொகுதிக்கு பக்க பலமாக் உள்ளது. மேலும் இவை வெள்ளையணுக்கள் உருவாவதற்கு உதவுகின்றது.
3. பழங்கள் மற்றும் காய்கள் (விட்டமின் சி, ஏ)
விட்டமின் சி நோய் எதிர்ப்பு தொகுதியை மேம்படுத்தி, வெள்ளையணுக்களின் உருவாக்கத்திற்கு உதவுகின்றது. இதனால் தொற்றுக்களில் எதிராகச் செயற்பட்டு உடல் ஆரோக்கியத்தை பேணுகின்றது. தினமும் 200 மில்லிகிராம் விட்டமின் சி எடுத்துக் கொள்வது அவசியமானது. விட்டமின் சி அதிகளவில் தோடம்பழம், எலுமிச்சை, கோவா, பப்பாசி, ஸ்ட்ரோபரி போன்றவற்றில் உள்ளது.
விட்டமின் ஏ வெள்ளையணுக்களை உருவாக்கி தொற்றுக்களிற்கு எதிராகச் செயற்பட வைக்கும். இவை கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, கரட், புரோக்கோலி போன்றவற்றில் அதிகம் உள்ளது.
4. மீன் மற்றும் ஆளி எண்ணெய். (ஒமேகா-3 கொழுப்பமிலம்)
மீன் மற்றும் ஆளி எண்ணெய்யில் அதிகளவான ஒமேகா-3 கொழுப்பமிலம் உள்ளதனால் இவை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலை தொற்றுக்களின் பாதிப்புக்களில் இருந்து பாதுகாக்கின்றது.
5. சோயா அரிசி பானங்கள் மற்றும் பாலுணவுப் பொருட்கள். (விட்டமின் பி12)
விட்டமின் பி12 அளவு உடலில் குறைவடையும் போது வெள்ளையணுக்களின் எண்ணிக்கையும் குறாஇவடைகின்றது. விட்டமின் பி12 அதிகளவில் சோயா, அரிசி பானங்களில் மற்றும் பால், சீஸ் போன்ற பாலுணவுப் பொருட்களில் அதிகளவான விட்டமின் பி12 காணாப்படுகின்றது.