• Tue. Apr 7th, 2026

STF பாதுகாப்புடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்கிறது.

Byadmin

Dec 7, 2018

(STF பாதுகாப்புடன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான வழக்கு விசாரணை தொடர்கிறது.)

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்புக்கு, இன்றைய தினமும் (07), விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களாகவே, நீதிமன்ற வளாகத்துக்கு, அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இன்றைய தினமும் அவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பிரதம நீதியரசர் உள்ளிட்ட எழுவர் அடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையிலேயே, இந்தப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்த மனுக்கள் மீதான தனது தரப்பு அறிக்கையை நீதிமன்றில் தாக்கல் செய்த சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, இந்த மனுவை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை என்று நேற்று முன்தினம் நீதிமன்றில் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *