• Mon. Apr 6th, 2026

ஜனாதிபதி மற்றும் பொதுஜன முன்னணி உறுப்பினர்களிடையே சந்திப்பு…

Byadmin

Dec 10, 2018

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் இன்று(10) காலை ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கு முன்னர் பொதுஜன முன்னணியுடன் இணைந்து செயற்படும் கட்சிகளின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதன் பின்னர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள அவர்கள், உயர்நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அதன் பின்னர் தேர்தல் ஒன்று நடைபெறுமாயின் அது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *