• Mon. Apr 6th, 2026

தமிழ் கூட்டமைப்புக்கு நாங்கள், எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை – சுமந்திரனுக்கு மகிந்த தரப்பு பதிலடி

Byadmin

Dec 14, 2018

(தமிழ் கூட்டமைப்புக்கு நாங்கள், எந்த வாக்குறுதியும் வழங்கவில்லை – சுமந்திரனுக்கு மகிந்த தரப்பு பதிலடி)

தேகவுக்கும், கூட்டமைப்புக்கும் இடையில் இரகசிய உடன்பாடு செய்து கொள்ளப்பட்டுள்ளதாக, பொதுஜன முன்னணி தொடர்ந்து குற்றம் சாட்டுகளை முன்வைத்தால், எமது ஆதரவை தமது தரப்புக்குப் பெறுவதற்காக, நாமல் ராஜபக்ச உள்ளிட்டவர்கள் நடத்திய பேச்சுக்களின் போது, சிறிலங்கா பொதுஜன முன்னணி வழங்க முன்வந்த வாக்குறுதிகளை நாங்கள அம்பலப்படுத்த நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.
அதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவுடன், தாம் கையெழுத்திட்டுள்ளதாக வெளியாகியுள்ள ஆவணம் பொய்யானது என்றும் அத்தகைய எந்த உடன்பாட்டிலும் தாம் கையெழுத்திடவில்லை என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, கூட்டமைப்புக்கு தாங்கள் இரகசியமாக எந்த வாக்குறுதிகளையும் வழங்க முன்வரவில்லை என்றும், அவர்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்துவதாயின் அதனை வெளிப்படையாகவே மேற்கொள்வோம் என்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *