• Tue. Apr 7th, 2026

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.

Byadmin

Dec 21, 2018

(பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது.)

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்,  எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பெற்றோல்  10 ரூபாவால் மற்றும் டீசல்  ஒரு லீற்றர் 5  ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ( சுப்பர் டீசல் 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது)

கடந்த ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதியன்று, எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்ட போது, ஒரு பெரல் கச்சா எண்ணெய், 85 டொலராகக் காணப்பட்டது. இந்த விலை தற்போது, 57 டொலராகக் குறைவடைந்துள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் விலைச் சூத்திரத்துக்கு அமைய, எரிபொருட்களின் விலைகள், இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக, திறைசேரித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *